Watch Video : ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் சூப்பர்ஃபிட் லுக்..! இது தான் காரணமா? அசர வைக்கும் கிளிம்ப்ஸ்..

கட்டா குஸ்தி திரைப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி எப்படி தன்னை தயார்படுத்தி கொண்டார் என்பதின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவிதேஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. கதாநாயகனாக விஷ்ணுவிஷாலே நடித்திருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார். இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்தார். 

Continues below advertisement

 

 


மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி:

'கட்டா குஸ்தி' திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்தார். அவரின் சிறப்பான நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தார். இப்படத்திற்காக தனது மனதை மட்டுமல்லாமல் தனது உடலையும் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு சில உடல் மாற்றங்களை கொண்டு வருவதற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். சூப்பர்ஃபிட் தோற்றத்தை பெறுவதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சி வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் செய்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. 

 

 

ஐஸ்வர்யா லெக்ஷ்மி தற்போது வெளியிட்டுள்ள இந்த போஸ்ட் அவரின் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும் அவரின் இந்த கடுமையான முயற்சிக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. 

 

நகைச்சுவை கலந்த பேமிலி சப்ஜெக்ட் :

'கட்டா குஸ்தி' திரைப்படம் இரண்டு வெவ்வேறு வாழ்க்கை முறைகளை பின்பற்றும் ஒரு ஜோடி திருமணம் செய்து கொள்கிறது. திருமணத்திற்கு  பிறகு அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை நகைச்சுவையுடன் இயக்குனர் செல்ல அய்யாவு படமாக்கியுள்ளார். முனீஸ்காந்த், கருணாஸ்,கஜராஜ் என பலரும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் முதல் வாரத்திலேயே 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் வார இறுதியில் மேலும் இதன் வசூல் விகிதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola