கொரோனாவில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனி இசைப்பாடல் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த பாடல் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று நான்கு மொழிகளில் வெளியானது. அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் பாடல் ஹிட்டாக வேண்டுமென சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். ”மியூசிக் வீடியோ வெளியானதற்கு என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டிருக்கிறார் தனுஷ்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் போட்ட பதிவிற்கு ஐஸ்வர்யா தன்னுடைய பதில் பதிவை செய்துள்ளார். அதில், “நன்றி தனுஷ் மிகவும் வேகமான வாழ்த்து” எனக் கூறியுள்ளார். அவரின் இந்தப் பதில் பதிவும் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
TN Budget 2022 LIVE: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்பு..
முன்னதாக, நடிகர் தனுஷ் மாறன் திரைப்பட வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார், “இனி மாறன் திரைப்படம் உங்களுடையது, ஓம் நமச்சிவாய.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்திருந்தார். இது நெட்டிசன்களின் கண்களில் சிக்கவே, தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து இருக்கப்போகிறார்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், சூப்பர்ஸ்டார் ரஜினி ஐஸ்வர்யாவிடம் பேசியிருப்பதாகவும், அவர் பேசியதை தொடர்ந்து தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இதற்கு தனுஷ்தான் பிடி கொடுக்கமால் இருக்கிறார் என்றும் அரசல் புரசலாக கூறப்பட்டது. அதன்படி, தற்போது தனுஷின் டீவீட்டை ஐஸ்வர்யா லைக் செய்திருப்பதும், ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் வாழ்த்துகள் தெரிவித்திருப்பதும் ரசிகர்களுக்கு மேலும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. இருவருக்கும் இடையேயுள்ள இந்த நிலை மீண்டும் இணைவதற்கான அறிகுறியா? அல்லது வெறும் நட்புதானா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்