புதுமுக நடிகர் L. K .அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான, 'சிறை ' திரைப்படம் இதுவரை உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படமான 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

Continues below advertisement

சிறை 30 கோடி வசூல் 

விஜயின் மாஸ்டர் , லியோ ஆகிய படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது 7 ஸ்கிரின் நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் அவரது மகன் அக்‌ஷய் குமார் அண்மையில் சிறை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். விக்ரம் பிரபு இப்படத்தில் நாயகனாக நடித்தார். டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுத வெற்றிமாறனின் உதவி இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இந்த படத்தை இயக்கினார். மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது சிறை. இப்படம் திரையரங்கில் மட்டும் 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டது. 

'சிறை ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 13'  படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

Continues below advertisement

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபன் என்டர்டெய்னராக (( Fun Entertainment)) தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று  வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.