ஏ.ஆர் ரஹ்மான்


இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா தங்கள் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்கள். நேற்று நவம்பர் 19 ஆம் தேதி சாய்ராவின் வழக்கறிஞர் மூலம் இந்த தகவல் வெளியானது. “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட  மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்போடு இருவரும்  முடிவு செய்துள்ளனர். வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா தெரிவித்துள்ளனர்." என சாய்ரா தரப்பு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏ ஆர் ரஹ்மான் தனது விவாகரத்து பற்றி இப்படி கூறியுள்ளார் " எங்கள் திருமண வாழ்வில் நாங்கள் முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். எங்கள் நண்பர்கள், இந்த பலவீனமான நேரத்தை நாங்கள் கடந்து செல்லும்போது ஆதரவாக இருக்கும் நண்பர்களுக்கும்  எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி"


ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் விவாகரத்து


ஒருபக்கம் ஏஆர் ரஹ்மானின் விவாகரத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் ஆச்சரியப்படும் வகையில் இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளது. ரஹ்மானின் விவாகரத்து அறிவிக்கப்பட்டத அதே நேரத்தில்  ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸிஸ்டாக இருந்து வரும் மோகிணி என்பர் தனது கணவருடனான விவாகரத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவை தானும் தனது கணவரும் சேர்ந்து எடுத்துள்ளதாகவும் இதுபற்றி மக்கள் தவறாக  எண்ண வேண்டாம் என்றும் மோகினி தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் தானும் தனது கணவர் மேக்ஸுல் நல்ல நணபர்களாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்