Adipurush Box Office Collection: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கடந்த   ஜூன் மாதம் 16 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது.


கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான ஆதிபுருஷ் முதல் வாரத்தில் எதிர்பாராத வசூலை ஈட்டியது. ஆனால் படத்தின் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள். மிகச் சுமாரான கிராஃபிக்ஸ் காட்சிகள், படத்தில் இடம்பெற்ற காட்சிகளாக உருவான சர்ச்சை என எல்லாம் சேர்ந்து முதல் வாரத்திற்கு பின் மிகப்பெரிய சரிவை நோக்கி சென்றுள்ளது படத்தின் வசூல். இதே நிலையில் சென்றால் படம் உருவாக்க செலவிடப்பட்ட பணத்தைக்கூட வசூலிக்காத நிலையே ஏற்படும்.


அசத்திய முதல் நாள் வசூல்


 அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதிலும் சுமார் 86. 75 கோடி வசூல் செய்திருந்தது. அதே நேரத்தில் உலகம் முழுவதும்  140  கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வத் தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.


மிகைப்படுத்தப்பட்ட தகவல்


ஆதிபுருஷ் திரைப்படம் முதல்  நான்கு நாட்களில் மட்டுமெ உலகம் முழுவதிலும் 375  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால் இந்தத் தகவல் மிகைப்படுத்தப்பட்டது என விமர்சகர்கள் கூறுகிறார்கள். 


ஆதிபுருஷ் படத்தை நிராகரித்த தமிழ் மற்றும் கேரள ரசிகர்கள்


அதே நேரத்தில் தமிழ், மலையாளம்,  ஆகிய மொழிகளில் ஒப்பீட்டளவில் சற்று சுமாரான ஓப்பனிங்கே  அமைந்தது. முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் வெறும் 4.2 கோடியும் கர்னாடகாவில் 18 கோடியும் கேரள மாநிலத்தில் 1.5 கோடி வசூல் செய்தது ஆதிபுருஷ்.


 முதல் நாளைவிட 90 சதவீதம் குறைவான வசூல்


படத்திற்கு அருகி வந்த கூட்டத்தைத் தொடர்ந்து கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில் படத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது.  இந்நிலையில் முதல்  நாள் வசூலைக்காட்டிலும் 90 சதவீதம் படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழாவது நாளில் அதிபுருஷ் இந்தியா முழவதும் வெறும் 4.85 கோடி வசூலித்தது.


11 நாள் வசூல்


நேற்றுடன் திரையரங்குகளில் வெளியாகி 11 நாட்களாகும் நிலையில் இந்தியா முழுவதிலும் வெறும் 1.75 கோடி மட்டுமே வசூலித்தது. இந்த 11 நாளில் இந்தியாவில் முழுவதும்  277 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது ஆதிபுருஷ் திரைப்படம். ஆதிபுருஷ் திரைப்படம் மொத்தம் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது என்பதும் மேலும் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக கூடுதலாக 100 கோடி செலவு செய்தது தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.