அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களை முதல்வர் அலுவலகத்தில் வைத்து சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

நடிகர்கா திரையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜய் தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார். வருகிறார். விஜய் முதல்வராக பதவியேற்றது தொடங்கி பல்வேறு திரை பிரபலங்கள் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை குஷ்பு , சிபி சத்யராஜ் , சாந்தனு , அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் சினிமா பிரபலங்களை விஜய் தனது ஓய்வு நேரத்தில் சந்தித்தார். அந்த வகையில் இன்று நடிகர் பிரபு அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் மருமகன் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். 

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விஜய் கொடுத்த ஆதரவு 

ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பது பலரும் அறிந்த விஷயமே. ஆனால் விஜய்க்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இடையில் ஒரு அழகான நட்புறவு இருந்து வருகிறது. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயின் பார்ட்டி ஒன்றில் ஆதிக் கலந்துகொண்டார். அப்போது ஆதிக் ரவிச்சந்திரனின் நண்பர் " அண்ணா இவன் பிட்டு படம் எடுத்திருக்கான் ' என கத்த அதற்கு விஜய் 'ஹிட்டு படம் எடுத்துட்டான்ல அது போதும் ' என ஆதிக்கிற்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement