குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் உருவாகும்  மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான குட் பேட் அக்லி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . , த்ரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற வெற்றிகரமான படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கான இடத்தை உருவாக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இயக்குநர் என்பதைவிட இவர் ஒரு முரட்டு அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத் தக்கது. அஜித்தை இயக்குவது என்பது அவரது பல வருட கனவாக இருந்து தற்போது நிஜமாகியுள்ளது. இதனால் இந்த படத்தை ஒரு ரசிகராக அஜித்தை எப்படியெல்லாம் பார்க்க நினைத்தாரோ அப்படி செதுக்கி வருகிறார் என்று சொல்லலாம். ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

கண் கலங்கிய அதிக்

" குட் பேட் அக்லி ஒரு பயங்கரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும். ஆதிக் ரவிச்சந்திரன் மாதிரி ஒரு அஜித் ரசிகர்கரை நீங்கள் பார்க்கவே முடியாது. காலேஜ் படிக்கும்போது ஒவ்வொரு அஜித் படம் ரிலீஸ் ஆகும் போதும் அஜித்தின் அந்த பட கெட் அப்பில் வருவார். குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் முதல் ஷாட் எடுத்து முடித்ததும் ஆதிக் கண் கலங்கிவிட்டார்' என ஜி.வி தெரிவித்துள்ளார் 

குட் பேட் அக்லி டீசர்

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதால் இனி வரும் நாட்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியாக இருக்கிறது. தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்