இன்றைய சூழலில் பல்வேறு புதுமுக நடிகர்களை தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது. இயக்குநர்கள் தங்களது கதாபாத்திரத்த்ற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்வதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு தமிழ் படத்தில் தமிழ் மொழி நடிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழி நடிகர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையி வெளியான தமிழ் படங்களில் தோன்றிய கதாநாயகிகளாக நடித்த நடிகர்களைப் பற்றிய இரு சின்ன அறிமுகம் இது      .


சஞ்சுலா சாரதி


சஞ்சுலா சாரதி என்கிற பெயர் சற்று பரிச்சயம் இல்லாததாக இருக்கலாம். மாடர்ன் லவ் ஆந்தலாஜியில் இடம்பெற்ற மார்கழி படத்தில்  வந்த 16 வயதுப் பெண் என்று சொன்னால் உடனே அந்த முகம் நியாபகத்திற்கு வருகிறதா. அவர்தான் சஞ்சுலா சாரதி. மாடர்ன் லவ் படத்தில் நடிப்பதற்காக  நடத்தப்பட்ட ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டு மார்கழியில் நடித்தார். தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கொண்டவர். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு தற்போது ஹவுஸ் சர்ஜியனாக இருக்கிறார்.


வாமிகா கப்பி


அதே மாடர்ன் லவ் ஆந்தலாஜியில் தியாகராஜா குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை கதையில் கதாநாயகியாக நடித்திருந்தவர் வாமிகா. பஞ்சாப்பை பூர்விகமாகக் கொண்டவர். பஞ்சாபி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். ஜப் வி மெட் என்கிற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் மாலை நேரத்து மயக்கம். இறவாக் காலம், நினைவோ ஒரு பறவை  ஆகியப் படங்களில் நடித்திருந்தார். அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஜுபிலி இணையத் தொடரில் நடித்திருந்தார்.


திவ்யான்ஷா கெளஷிக்


ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய மைக்கல் திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் திவ்யான்ஷா கெளஷிக். தெலுங்குப் படங்களில் பிரதானமாக நடித்து வருகிறார். தற்போது வெளியாகியிருக்கும் டக்கர் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்திருக்கிறார்.


சஞ்சனா நடராஜன்


தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் படத்தின் தொடக்கத்தில் வரும் ரகிட ரகிட பாடலில் ஒரு சூப்பரான டான்ஸ் மூவிற்காக ஃபேமஸானார்  இல்லையா அவர்தான் சஞ்சனா நடராஜன்.சென்னையை சேர்ந்தவர். இதனைத் தொடர்ந்து சார்பட்டாப் பரம்பரையில் கலையரசனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டியர் ஃப்ரண்ட் என்கிற மலையாளப் படத்தில் தமிழ் பெண்னாக நடித்தவர். இறுதி சுற்று, 2.0 ஆகியப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஒரு முழுநீளப் படத்தில் நடித்ததில்லை. தற்போது நடிகர் குரு சோமசுந்தரத்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.