கேரள மாநிலத்தில் பிறந்து , பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை வித்யா பாலன்.  Dirty Picture திரைப்படத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்த வித்தியாபாலன் பாலிவுட் பத்திரிகைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. ஆனால் தனது உடல் குறித்த விமர்சனங்களை துணிவாக எதிர்க்கொண்டார் . இன்று அவருக்கு ஏற்ற மாதியான கதாபாத்திரங்களை குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்தும் , கதாநாயகர்கள் ஏன் ஒல்லியான பெண்களை வேண்டும் என்கிறார்கள் என்பது குறித்தும் போல்டாக பேசியிருக்கிறார். 


 






வித்யாபாலன் நேர்காணலில்  கூறியதாவது :


”ஐந்து விரல்கள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை.அதே மாதிரித்தான் எல்லோருடைய உடல் அமைப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மற்ற விரல்களை காட்டிலும் கட்டை விரல் பெருசாகத்தானே இருக்கிறது. ஆனால் ஐந்து விரல்களும் இல்லை என்றால் அந்த கை எப்படி முழுமையடையும்,  கை இயங்காது.அப்படித்தான் நாமலும். நம்முடைய வேறுபாடுகளை கொண்டாடனும். எனது உடம்பு வேறு மாதிரி உங்களுடையது வேறு மாதிரி. எனது உடல்தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.


உடல் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் வாழ்க்கையே இல்லை. நான் அதற்கு சிறந்தவளாக இருக்க விரும்புகிறேன்.நானும் ஒரு காலத்தில் ஒல்லியாக வேண்டும் என நினைத்தவள்தான். எந்த ஆடை அணிந்தாலும்  சந்தோஷமே இருக்காது. கண்ணாடி முன்னால் நின்றால்  என்னையே எனக்கு பிடிக்காது. ஆனால் அப்படியெல்லாம் செய்வது மிகவும் தவறு. என்னை உயிரோடு வைத்திருக்கும் உடலை நான் விமர்சிக்கவே கூடாது. எனது உடலை நான் கொண்டாட ஆரம்பித்த பிறகு நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன். நான் அழகாக உணர்ந்தேன். எல்லா நடிகர்களுமே ஒல்லியாகவா இருக்கிறார்கள். இல்லையே ஆனால் அவங்களுக்குதான் ஒல்லியான பெண்ணுடன் ஜோடியாக நடிக்க வேண்டும். ஏன்னா அது அவங்களுடைய தாழ்வு மனப்பான்மை. அப்போதான் திரையில அழகா தெரியுவாங்க. என்னிடம் பல இயக்குநர்கள் சொல்லியிருக்காங்க உடல் எடையை குறைக்க சொல்லி. நான் அவங்க சொல்லுற மாதிரியே உடல் எடையை குறைக்க முயற்சி பண்ணேன். அதன் பிறகு நான் இயக்குநர்களிடம் சொன்னேன் உங்களுக்கு வேறு மாதிரியான உடல் அமைப்புடன் நடிகை வேண்டுமென்றால் வேறு யாரையாவது தொடர்புக்கொள்ளுங்கள் என்று.


என்னால் உடல் எடையை குறைக்க முடியாதுன்னு சொன்னதை இன்று பலர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இப்போது யாரும் உடல் எடையை குறைக்க சொல்வதில்லை. திருமணத்திற்கு பிறகு  நடிக்க கூடாது என்ற நிலை மாறிவிட்டது. இப்போது எல்லோரும் நடிக்க ஆரமித்துவிட்டார்கள் “ என பலருக்குமான நேர்மறை கருத்துகளை பகிர்ந்திருக்கிறார் வித்யாபாலன்.