போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனவர் வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். நல்ல நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட வரலட்சுமி சரத்குமார் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பாலா சார்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்
சினிமா மற்றும் தனது திருமணம் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தில் நடித்தது குறித்து பேசினார். நான் நடிக்கிற முதல் படம் என்ன ஆனாலும் சரி, கமிட் ஆகிட்டோம் படத்தை முடிச்சு கொடுத்துட்டு போகனும் தான் இருந்தேன். இந்த படம் எனக்கு ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன். என் லைஃப்ல மறக்க முடியாதுன்னு சொல்லலாம் என வரலட்சுமி தெரிவித்தார். மேலும், தாரா தப்பட்டை படம் குறித்து பேசிய அவர், ஒரு நடிகையா பாலா சார்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் தாரை தப்பட்டை தான். என் வீட்டில் இருக்க எல்லோரையும் பொய் சொல்லி சத்யம் தியேட்டரில் படம் பார்க்க வைத்தேன். அவங்க என்னடி பேய் மாதிரி நடிச்சிருக்க சொல்லி கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது என தெரிவித்தார்.
சர்காரில் வில்லி கதாப்பாத்திரம்
சண்டைக்கோழி 2 படத்திற்கு பிறகு நடிகையாக மட்டும் இல்லாமல் இப்படியும் நடிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். அது லிங்குசாமி சாரோட எழுத்து தான் காரணம். அவர் கதை சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதன் மூலம் சர்கார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் ரொம்ப ஸ்வீட். நான் விஜய் சார்கூட நடிக்கும் போது ஒரு ரசிகையா மனதிற்குள் கொண்டாட்டமாக இருந்தது. நான் தளபதியோட பயங்கரமான ஃபேன். எனக்கு அவரை அவ்ளோ பிடிக்கும். சர்கார் படத்தை பார்த்துட்டு விஜய் சார் எனக்கு போன் பண்ணி, படம் பார்த்தேன் நீ ஏதோ பண்ணிருக்க அது நல்லா இருக்கு என சொல்லி பாராட்டினார். உனது கேரக்டர் நல்லா இருக்கு சொல்லும் போது ஹேப்பியா இருந்துச்சு என வரலட்சுமி தெரிவித்தார்.
திருமணம் பண்ண விருப்பம் இல்லை
ஆரம்பத்தில் எனக்கு கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட் இல்லை. இப்படியே இருந்திடலாம். என்ன ஆகிட போகுது அப்படித்தான் இருந்தேன். திருமணம் பண்ணிட்டு டிவோர்ஸ் அந்த கதையெல்லாம் எனக்கு பிடிக்காது. நல்ல பர்சனா இருக்கனும், என்னை அவர் புரிஞ்சிக்கணும், அவரை நான் புரிஞ்சுக்கணும் என்கிற விசயம் தான் மனதில் இருந்தது. அதே மாதிரியே நிகோலய் சச்தேவ் சரியான பர்சனாக இருந்தார். அது நல்லபடியா போயிட்டு இருக்கு. இதுவரை எந்த பிரச்னையும் இல்லை என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சர்கார் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை. வதந்தி பரப்புராங்க. தியேட்டரில் பார்க்க ஆர்வமா இருக்கேன் என தெரிவித்துள்ளார்.