சரத்குமார் வரலட்சுமி... சமீபமாக படங்களில் அவரை பார்க்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு இந்த செய்தி ஆறுதல் தரலாம். காஷ்மீர் லடாக் பகுதியில் அவர் விஜயம் செய்த நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் வரலட்சுமி.


தனது இன்ஸ்டா பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பாடலான ‛வெள்ளை மழை இங்கு  பொழிகின்றது...’ பாடலின் இசைப் பின்னணியில், லடாக்கின் அழகிய இடங்களில் வரலட்சுமி வலம் வருகிறார்.

முக கவசத்தோவு புல்லட்டில் பயணிக்கும் அவர், அதன் பின் பனி படர்ந்த மலை, பாய்ந்து ஓடும் நதி, தாழ்ந்து பார்க்கும் பள்ளத்தாக்கு என அனைத்து இடங்களிலும் அழகாய் வந்து நிற்கிறார்.

அவரது அழகிய பயணத்தில் சிறந்தவற்றை தொகுத்து அவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் சில போட்டோக்களும் இடம் பெற்றுள்ளன. 

 

வரலட்சுமி ஒரு இயற்கை விரும்பி... டிசம்பர் வந்துவிட்டது என்பதை இந்த உலகிற்கு  சொல்ல விரும்பியே அவர் இந்த பதிவை செய்துள்ளார்.  டிசம்பரில் லடாக் பகுதியின் அழகையும், அது தரும் ஆச்சர்யமான உணர்வையும் தனது வரிகளாலும் வெளிப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

பெண்ணியத்திற்கான குரலாய் வெடித்து சிதறும் வரலட்சுமி, காரசாரமாகவே பார்த்த நமக்கு, இயற்கையோடு இனிக்கும் மிட்டாயாய் தித்திக்கும் வரலட்சுமியை பார்ப்பது கொஞ்சம் வித்தியாசம் தான். இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால்... வரலெட்சுமி உடல் எடையை குறைத்து கொஞ்சம், இல்லை... இல்லை... ரொம்பவே இளைத்துவிட்டார். 





 

பார்க்க ஸ்லிம்மாக.. ‛வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. கொள்ளை நிலா உடல் நனைகின்றது... இங்கு சூடான இடம் கூட குளிர்கின்றது...’ என நம்மையும் அங்கு உலகத்திற்குள் அழைத்து செல்கிறார் வரு!