அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கியிருக்கும் திரைப்படம் பாயும் ஒளி . விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன், வேல ராமமூர்த்தி , விவேக் பிரசன்னா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்வரா சாகர் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது பாயும் ஒளி.
படம் குறித்தான தகவல் ஒருபக்கம் இருக்க படத்தின் கதாநாயகியான வாணி போஜன் நடிகர் விஜய் குறித்து சிலாகித்து பேசியது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய்
தமிழ்நாடு முழுவதும் அண்மையில் வெளியான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்படத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் கலந்துகொண்டு இந்த விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் “ என் நெஞ்சில் குடியிருக்கும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும் வணக்கம். ஆடியோ விழா, விருது விழா போன்ற பலவற்றில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுதான் முதல்முறை. ஏதோ பெரிய பொறுப்பு வந்ததாக உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்கிறேன் என்ற பழமொழி உள்ளது. உங்களை பார்க்கும்போது என்னுடைய பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகிறது.
மாணவர்களுக்கு மத்தியில் க்யூட்டாக விஜய்
இந்த நிகழ்ச்சியின்போது விஜய் கையில் பரிசு வாங்கிய மாணவர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களது ஆசைகளை வெளிப்படுத்தினார்கள். விஜய் லோகேஷ் கனகராஜ் ஆகியவரகள் கைகோர்ப்பது மாதிரியான புகைப்படத்தைப் போலவே மாணவர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து மாணவி ஒருவர் தனது கையுடன் விஜயின் கையை இணைத்து ஹார்ட் ஒன்றை செய்தார். அதேபோல் பெற்றோர் ஒருவர் விஜய்க்கு முத்தம் கொடுத்தார். இந்தத் தருணங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கு மத்தியில் குழந்தையைப் போலவே க்யூட்டாக நடந்துகொண்டார் விஜய்.
என் கண்ணே பட்டுடும்
வாணி போஜன் பேட்டியில் அவரிடம் விஜயின் ஃபோட்டோ காட்டப்படுகிறது. அந்தப் படத்தைப் பார்த்த வாணி போஜன் விஜய்க்கு திருஷ்டி கழித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் செய்த க்யூட்டான விஷயங்களைப் பார்த்து தான் மிகவும் ரசித்ததாக கூறினார் வாணி போஜன்.