நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மகளிர் மட்டும். 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கண்ட திரைப்படங்களுள் மகளிர் மட்டும் திரைப்படமும் ஒன்று . இளையராஜா இசையில் சிங்கீதம் சீனிவாசராவ் படத்தை இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று அப்போதே சர்ச்சையானது. அதாவது நாசர் , ரேவதி, ஊர்வசி , ரோகிணி உள்ளிட்ட நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடுவது போன்ற பாடல் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள் . “கறவை மாடு மூனு..காளை மாடு ஒன்னு “ என இடம்பெற்றிருந்த அந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார் . அந்த பாடலில் நான் நடிக்க மாட்டேன் என ஊர்வசி கூறியதாக செய்திகள் உள்ள நிலையில் அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த நடிகை ஊர்வசி “மகளிர் மட்டும் படத்துல கறவை மாடு ஒன்னு அப்படினு ஒரு பாட்டு இருக்கும். அந்த பாட்ட நாங்க ஷூட்டிங் சமயத்துலதான் கேட்டோம். கறவை மாடு மூனு ..காளை மாடு ஒன்னு அப்படினு நாமலே லிப் மொமண்ட் கொடுத்து, கறவை மாடுனு ஏத்துக்குறோமா. அய்யய்ய..நல்லாயில்ல..நான் இதை பாடமாட்டேன் அப்படினு சொல்லிட்டேன்” என்னும் ஊர்வசி கடைசி வரைக்கும் அந்த வரிகளை பாடியிருக்க மாட்டார். அதன் பிறகு நடந்த சுவாரஸ்யம் ஒன்றையும் ஊர்வசி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
“அதன் பிறகு ஷூட்டிங் ஒன்றிற்காக காரில் செல்லும் பொழுது ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி ( 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் ) என்னும் பாடல் ஓடியது. அப்போதுதான் அந்த பாடலை முதன் முறையாக கேட்கிறேன். அப்போ வாலி சார் “எல்லோரும் டேக் இட் ஈஸி சொல்லுங்கப்பா“ என்றார். நான் கேட்டேன் சார் இந்த பாடலை யாரை வச்சு எழுதுனீங்கன்னு ..உடனே உன்னை வச்சுதான் எழுதுனேன் என்றார்“ என பரவலாக உள்ள தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ஊர்வசி . பாருங்களேன்! படத்தின் பாடலிலேயே உரையாடியிருக்கிறார் வாலி ! ஊர்வசி ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் அதே பெயரிலான மற்றொரு படத்தில் நான்கு பெண்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.