நடிகை த்ரிஷா புதிய படங்கள் கமிட் ஆவதை நிறுத்திக்கொண்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன. ஊடகவியலாளர் சித்ரா லட்சுமாணன் தனது யூடியூப் சேனலில் த்ரிஷா சினிமாவை விட்டு விலக இருக்கும் தகவல் உண்மை தான் என தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் காட்டுத்தீப்போல் பரவியது. இதற்கு த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா " நான் சினிமாவை கைவிட்டு ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு நான்கு குழந்தைகளையும் பெற்றுவிட்டேன். அந்த குழந்தைகளுக்கு நேற்றோடு இரண்டு வயது ஆகிவிட்டது. இன்னும் வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா இல்லை இன்றைக்கான கட்டுக்கதைகளின் கோட்டா முடிந்துவிட்டதா?" என்று த்ரிஷா பதிவிட்டுள்ளார்
