மே மாதம் நடிகை த்ரிஷாவிற்கு மிக உற்சாகமான மாதமாக அமைந்துள்ளது. தனது பிறந்தநாள் மாதமான மே மாதத்தில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது வயது குறித்த த்ரிஷாவின் சமீபத்திய பதிவு வைரலாகி வருகிறது
கடந்த 25 ஆண்டுகளக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் டிகை த்ரிஷா . இவர் கடந்த மே 4 ஆம் தேதி தனது 43 ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். மே மாதம் தன்னுடைய மாதமாக இருக்கும் என த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கேற்றபடி மே மாதம் த்ரிஷாவுக்கு கோலாகலமான மாதமாக அமைந்துள்ளது.
த்ரிஷாவின் பிறந்தநாளில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக தனிப்பெரும்பான்மையில் வெற்றிபெற்றது. தவெக முன்னிலை வகித்த நிலையில் த்ரிஷா நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு நேரடியாக சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார். கடந்த மே 14 ஆம் தேதி வெளியான கருப்பு படத்திலும் த்ரிஷா நாய்கியாக நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் ரூ 300 கோடி வசூலை குவித்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படி த்ரிஷாவிற்கு அடுத்தடுத்த வெற்றிகளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது
த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவு
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் த்ரிஷா 'இந்த மேஜிக்கல் மே மாதத்தில் இன்னும் சில விஷயங்கள் காத்திருக்கின்றன. இன்னும் நீண்ட காலத்திற்கு நான் புன்னகையுடன் காணப்படுவேன். ' என அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் " 40 வயதில் 25 வயது பெண்ணைப் போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது ஐடியா இல்லை. 20களில் இருக்கும் பெண்கள் 40 வயதிலும் ஆசைப்படலாம் என்பதை உணர்த்துவே நோக்கம்" என அவர் ஒரு வாக்கியத்தை பகிர்ந்துள்ளார்.
