மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் சுடு தண்ணீர் ஊற்றியபிறகு பெரிய பேண்டேஜ் ஒன்றைப் போட்டுக்கொண்டு வலியால் வடிவேலு சார் கூறும் “ எரியுது மாலா என்ற டயலாக் பேசி சீன் நடிக்கிறப்ப எங்களால் சிரிப்ப அடக்கவே முடியல“ என பழைய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை தாரணி.


சினிமாத்துறையில் தன்னுடைய 15 வயதில் அறிமுகமானார் தான் சென்னையைச் சேர்ந்த நடிகை தாரணி. கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலின் தங்கையாக நடித்ததன் மூலம் வெள்ளத்திரைக்கு அறிமுகமானார் தாரணி. இதன் பிறகு தமிழ் சினிமாவில் பாலைவனப் பறவைகள், சின்ன வாத்தியார், வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்ததோடு மட்டுமில்லாமல், காமெடி கதாபாத்திரத்திலும் தன்னுடைய திறமையை திறம்பட வெளிப்படுத்தியிருப்பார்.


செந்தில், கவுண்டனி, வடிவேலு, விவேக், சந்தானம் என முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்துள்ளார். குறிப்பாக மிடிஸ் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு சாருடன் இணைந்து நடித்த அனுபவங்களையும், அதில் வடிவேலு சார் என்னவெல்லாம் பண்ணினார் என்பது குறித்த தன் பழைய அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.



பொதுவாக மிடில் கிளாஸ் மாதவன் படம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் காமெடி என்றால், சுடு தண்ணீரால் தன் பின்புறம் ஊற்றிக்கொண்டு வடிவேலு சிரமப்படும் காட்சிகள் தான். அந்த நேரத்தில் மாமனார் வீட்டில் இரு மருமகன்கள் செய்யும் அலப்பறைக்கு  அளவே இருக்காது எனவும், வலியுடன் எரிச்சலை அனுபவிக்கும் போது எரியுல மாலா என்று கூறும் சீன் எடுக்குறப்ப எங்களால் சிரிப்ப அடக்கவே முடியல என்கிறார் தாரணி.  


குறிப்பாக வடிவேலு சார் அவ்வளவு பெரிய பேண்டேஜ் போட்டுட்டு வரும் போது, அவரை ஷார்ட்ல் பார்த்துட்டு எப்படி நம்மளால் சிரிக்காம நடிக்க முடியும் எனத் தெரிவிக்கும் அவர், சிரிப்ப அடக்கவே முடியாது செட்டே சிரிக்கும் என்கிறார்.


மேலும் வடிவேலு சார் சீன்ல யாராலும் நடிக்கவே முடியாது எனவும், நாம சீன்ல நடிக்கத்தான் போறோம்னு  நினைக்கும்போது அனைத்து தில்லாங்கடி வேலையெல்லாம் அவர் செய்வார் என கூறுகிறார். இதோடு இயக்குநர் காமெடி எடுக்குறப்ப கட் சொல்லவே மாட்டார். எதார்த்தமாக சில விஷயங்கள் நிகழும். அதில் ஒன்றுதான் பின்னாடி அடிப்பட்டு இருக்கும் போது,  Fan ஆ 12-ல வைக்க சொல் டி மாலா என்று கூறுவதைக்கேட்டதும் செட்டில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர் என்கிறார்.


குறிப்பாக இப்படத்தில் எனக்கு அம்மாவாக வரும் ரேவதி  அம்மா நடிக்கும் சீன்கள் அனைத்தும் ரொம்ப அழகாகவும் இருக்கும். இவர் பாடகி, இறைப்பற்றுள்ளவராக உள்ளார்.


மேலும் பூவே உனக்காக படத்தின் சூட்டிற்காக நான் சீரியல் முடித்துவிட்டு விஜய் சேஷ் மகால்ல சூட்டிங் போனப்ப, சங்கீதா வந்து உங்க புள்ள என சொன்னதும் பண்ணலாமா?வேண்டாம் னு யோசித்துட்டு இருந்தேன். ஆனால் விக்ரமன் சார் உங்களுக்கு ப்ளாஸ் பேக் ஒன்று உள்ளது எனவும் அதில் இளமைத்தோற்றத்தில் நீங்கள் இருப்பீர்கள் என்று சொன்னது தான் நிம்மதியாக இருந்து என தனது நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை தாரணி.



இப்படி சினிமாத்துறையில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தும் நடிகை தாரணி, விஷ்ணு, பூவே உனக்காக, மிடில் கிளாஸ் மாதவன், சூர்ய வம்சம், அஜித் நடிப்பில் 1998-இல் வெளிவந்த காதல் மன்னன், எதிரும் புதிரும், பிரியமான தோழி,துள்ளாத மனமும் துள்ளும், மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.


ஆனாலும் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் பிரபலம் ஆனதாக தெரிவிக்கும் இவர், இதுவரை சீரியல்களில் நடித்துவருகிறார். கடந்த 1997 ஆம் மங்கை சீரியலில் அறிமுகமாகி தற்போது வரை ஜி தமிழின் ரஜினி போன்ற பல சீரியல்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.