கருப்பன், பலே வெள்ளையத் தேவா, பிருந்தாவனம், நெஞ்சுக்குள் நீதி போன்ற படங்களில் நடித்தவர் தான்யா ரவிச்சந்திரன். இவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் ஆவார். தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கான படங்களை நடிக்காவிட்டாலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கருப்பன் படம் அனைத்து தரப்பு மக்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது. அதில் விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிக்கும் படியே இருந்தன. தமிழை போன்று தெலுங்கிலும் ராஜ விக்ரமார்கா படத்திலும் நடித்திருக்கிறார். 

காதலனை அறிமுகப்படுத்திய நடிகை

சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் வெப் தொடரில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில், தான்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ட்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் பென்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் என தகவல் வெளியானது. பென்ஸ் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னாளில் காதலாக மலர்ந்து தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

நிச்சயதார்த்த புகைப்படம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முத்தம், சத்தியத்துடன் தனது காதலர் யார் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், தான்யா - கெளதம் காதல் ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை தான்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், நெருக்கமானவர்கள் கூட இருக்கும்போது எல்லாமே ஈசிதான் என குறிப்பிட்டுள்ளார். எப்போது திருமணம் என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது. திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.