பெரிய தென் இந்திய ஸ்டார் ஒருவரின் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குநர் தன்னை மிக மோசமாக நடத்தியதாக நடிகை தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமன்னாவை மிரட்டிய இயக்குநர்
பேட்டி ஒன்றில் தமன்னா பேசியபோது " நான் ஒரு தென் இந்திய ஸ்டார் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு காட்சியில் நடிப்பதற்கு என அசெளகரியமாக இருந்தது. இதனால் என்னால் இந்த காட்சியில் நடிக்க முடியாது என்று சொன்னேன். உடனே அந்த படத்தின் இயக்குநர் ஹீரோயினை மாற்றுங்கள் என்று எல்லார் முன்னாள் சொன்னார். அவர் அப்படி சொன்னதால் நான் தவறு செய்துவிட்டதாகவோ அவர் சொன்னதை செய்திருக்கலாம் என்று எல்லாம் யோசிக்கவில்லை. என்னுடைய தன்மானத்தை நான் இழக்கவில்லை. அடுத்த நாள் அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். நம்மை ஒரு கீழாக நடத்தும் போது நாம் அவர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமைதியாக இருந்து பல விஷயங்களை வெல்லலாம். என்னை மோசமாக நடத்தியவர்கள் அனைவரும் இன்று என்னை மதிக்கிறார்கள். " தமன்னா பேசியுள்ளார்
15 வயதில் தொடங்கிய கனவு
டிசம்பர் 21, 1989 அன்று மும்பையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த தமன்னாவுக்கு சின்ன வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் எழுந்தது. 15 வயதில், அவர் இந்தி திரைப்படமான 'சாந்த் சா ரோஷன் செஹ்ரா ' என்கிற படத்தில் அறிமுகமானார், துரதிர்ஷ்டவசமாக இந்த படம் பெரியளவில் கவனமீர்க்காமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது விரைவில், அவர் ஒரு இசை வீடியோவில் ("லாஃப்ஸோன் மெய்ன்") தோன்றினார், இந்த பாடல் தமன்னாவுக்கு ஓரளவுக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தனது கரியரில் சாதிக்க விரும்பிய அவர், ஸ்ரீ (2005) மூலம் தெலுங்குத் துறையிலும், கேடி (2006) மூலம் தமிழிலும் நுழைந்தார். அந்த ஆரம்பகால படங்கள் மிதமான கவனத்தை ஈர்த்தன, ஆனால் ஒரு திருப்புமுனையை வழங்கவில்லை.
அவரது முன்னேற்றம் 2007 இல் ஹேப்பி டேஸ் (தெலுங்கு) மற்றும் கல்லூரி (தமிழ்) மூலம் வந்தது. குறிப்பாக கல்லூரி திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பு இளம் ரசிகர்களை கவர்ந்தது அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் தமன்னா நடித்த ஆனந்த தாண்டவம், எண்டுகண்டே பிரேமந்தா, மற்றும் ஹிம்மத்வாலா போன்ற சில படங்களில் பின்னடைவுகள் இருந்தபோதிலும், விமர்சகர்கள் தொடர்ந்து அவரது நடிப்பைப் பாராட்டினர் - குறிப்பாக 100% லவ் படத்தில் , தமன்னாவின் மார்கெட் பெரியளவில் உயர்ந்தது.
பாகுபலி: 1 (2015) மற்றும் பாகுபலி 2: (2017) தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தன இரு படங்களும் சேர்த்து 21,000 கோடிக்கு மேல் வசூலித்து - அவரை ஒரு பான்-இந்திய நட்சத்திரமாக அடையாளம் காட்டின.