காவாலா தமன்னா இனி காவி தமன்னா...மாட்டுக் கோமியத்திற்கு ப்ரோமோஷன்...ஒடெல்லா 2 டிரைலரால் சர்ச்சை
Odela 2 Trailer : தமன்னா நடித்துள்ள ஒடெல்லா 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களிடம் அதிருபதியை ஏற்படுத்தியுள்ளன

தமன்னா
கடந்த 19 ஆண்டுகளாக தென் இந்திய சினிமாமில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. சமீப காலங்களில் இவர் குத்துப்பாடல்களில் பயங்கர கிளாமராக நடித்து வருவது ரசிகர்களிடம் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிகளில் நடிக்காத தமன்னாவா இது என ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இப்படியான நிலையில் தற்போது கிளாமரை ஓரங்கட்டி பக்தியை நோக்கி தனது வழியை மாற்றியுள்ளார் தமன்னா
ஒடெல்லா 2
அசோக் தேஜா இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ஒடெல்லா ரயில்வே ஸ்டேஷன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து த்ரில்லர் படமாக உருவான இப்படம் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெறவில்லை. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. தமன்னா இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பந்த் நந்தி டீம் வர்க்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒடெல்லா 2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
Just In




சர்ச்சைக்குரிய வசனங்கள் பேசும் தமன்னா
ஹாரர் த்ரில்லர் கலந்து உருவாகி இருக்கிறது ஒடெல்லா 2 . அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தின் சாயல் இப்படத்தை இருப்பதை பார்க்கலாம். காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பெரிய பொட்டோடு துறவி வேடத்தில் நடித்துள்ளார் தமன்னா." நிக்குறதுக்கு தேவ பூமாதா , வாழ்றதுக்கு தேவகோமாதா...நீங்க வாழ மாட்ட கொல்ல வேண்டிய அவசியல் இல்ல அதோட கோமியத்த வித்துக்கூட பொழைச்சுக்க முடியும் " என தமன்னா பேசும் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரைலரை வைத்து தற்போது தமன்னாவை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகிறார்கள். காவாலா தமன்னா இப்போது காவி தமன்னாவாக மாறிவிட்டார் என்கிற அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.