கோவிலுக்கு செல்ல புர்கா அணிந்து சென்ற பிரபல நடிகை சுவாதிக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் எழுந்துள்ளது. 


சுவாதி என்ற சொன்னால் தமிழ் சினிமாவில் இதே பெயரில் இருக்கும் நடிகைகள் நம் நினைவுக்கு வருவர். ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதியை தெரியுமா என கேட்டால் பலருக்கும் கண்கள் விரியும். அந்த அளவுக்கு அந்த ஒரு படமே ஐகானிக் ஆக மாறிப்போனது. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடல் தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் மெலோடிஸ் பாடல்கள் வரிசையில் முக்கிய படத்தைப் பிடித்துள்ளது. 


சுவாதி முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு டேஞ்சர் என்ற படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தெலுங்கு படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். சுப்பிரமணியபுரம் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த போராளி, கிருஷ்ணா நடித்த யாக்கை, ஜெய் நடித்த வடகறி, விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் சுவாதி நடித்திருப்பார்.கடைசியாக திரு என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். 


இதன்பிறகு விமான பைலட் விகாஸ் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்தோனேசியாவில் செட்டில் ஆன சுவாதி, சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை எடுத்து பதிவிட்ட அவர், சமீபத்தில் அதனை நீக்கினார். இதனால் இருவருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டுள்ளதா என்றெல்லாம் ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பினர். 


இப்படியான நிலையில் சுவாதி நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், ரயில் நிலையத்தில் கோவில் பயணம் மேற்கொள்ள சென்ற அவர்  புர்கா அணிந்தவாறு இருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் புர்கா அணிந்து சென்றது பற்றி கேள்வியெழுப்பினர். அதற்கு, ‘என் புர்கா மிகவும் ஸ்பெஷலானது. அது எப்போதும் நல்ல நினைவுகளை விட்டு செல்கிறது. சேஃப்டி பின் போல பாதுகாப்பாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.