பட நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஸ்வாதி ரெட்டி நடிகருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


தமிழ் சினிமாவில் சுவாதி என்ற  பெயரில் ஏராளமான நடிகைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு வகையில் தங்களை ரசிகர்களை நினைவுப்படுத்திக் கொள்ள சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதியை தெரியுமா என கேட்டால் பலருக்கும் நன்றாகவே தெரியும் . அந்த அளவுக்கு அந்த ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 


 ஐகானிக் ஹீரோயினாக மாறிப்போன சுவாதி அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  குறிப்பாக சுப்பிரமணியபுரம் படத்தில் அவர் நடித்து இடம் பெற்ற கண்கள் இரண்டால் பாடல் தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் மெலோடிஸ் பாடல்கள் வரிசையில் முக்கிய படத்தைப் பிடித்துள்ளது.  2005 ஆம் ஆண்டு டேஞ்சர் என்ற படத்தில் அறிமுகமான அவர்,  தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.






அதுமட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் பாடியும் உள்ளார். மேலும் தமிழில் சசிகுமார் நடித்த போராளி, கிருஷ்ணா நடித்த யாக்கை, ஜெய் நடித்த வடகறி, விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் சுவாதி நடித்துள்ளார். அதன்பின் பெரிதாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் விமான பைலட் விகாஸ் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் சுவாதி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.


அதேசமயம் இந்தோனேசியாவில் செட்டில் ஆன அவர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வந்த சுவாதி, சில மாதங்களுக்கு முன் அதனை நீக்கினார். இதனால் இருவருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டதா என்றெல்லாம் ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பினர். இப்படியான நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் சுவாதி  சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி உள்ளார்.


தற்போது அவர் ‘மந்த் ஆஃப் மது’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நவீன் சந்திரா,ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.


நீண்ட இடைவெளிக்குப் பின் சுவாதி  சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி உள்ளார். தற்போது அவர் ‘மந்த் ஆஃப் மது’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நவீன் சந்திரா,ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம் தேஜ் கலந்து கொண்டார். 


அப்போது பேசிய அவர், “கல்லூரி நாட்களில் இருந்தே சுவாதி தன்னுடைய சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் என புகழ்ந்து வாழ்த்து தெரிவித்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த சுவாதி திடீரென அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். சுவாதியின் இந்த செயல் அங்கிருந்தவர்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்தது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.