ரஜினி மணிரத்னம் கூட்டணி


சில பூக்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின் மட்டுமே அரிதாய் மலரும். ஆனால் சில பூக்கள் 30 ஆண்டுகள் கடந்தபின்னும் மலர்வதில்லை. ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான தளபதி படமும் அப்படியான ஒரு பூ. 1991 ஆம் ஆம் வெளியான இப்படம் ரஜினி கரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மறுபடியும் இந்த இருவரது கூட்டணியில் ஒரு படத்தைப் பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த வகையில் கமல் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். 34 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் கூட்டணியில் தக் லைஃப் படம் வெளியாக இருக்கிறது. 


ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி இரண்டாவது முறையாக இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது அடுத்த கேள்வி. இயக்குநர் மணிரத்னம் மனைவி நடிகை சுஹாசினி இது குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.


நடிகை சுஹாசினி கொடுத்த அப்டேட்


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுஹாசினி ரஜினி மணிரத்னம் இணைய இருப்பதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு " இது முதல்ல அவங்க ரெண்டு பெருக்கும் தெரியுமா ? " என பதிலளித்து எல்லார் ஆசையிலும் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். அப்படியானால் அந்த அரிய பூவுக்காக இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


வேட்டையன்


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 வெளியானது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜய , மஞ்சு வாரியர் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.  வேட்டையன் திரைப்படம் முதல் வாரத்தில் 250 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது வாரத்தில் விஜயின் தி கோட் பட வசூலை படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. 




மேலும் படிக்க : LIK First Single :வாவ்! மூச்சே விடாமல் பாடி அசத்திய அனிருத்... எல்.ஐ.கே படத்தின் தீமா பாடல் ப்ரோமோ