Just In





Sripriya's Daughter wedding | நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சினேகா மற்றும் அன்மோல் ஷர்மா திருமணம் லண்டனில் ஏற்கனவே சட்டப்படி பதி்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் 70 களின் பிற்பகுதி மற்றும் 80 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. அப்போதைய இளம் நாயகர்களான கமல்ஹாசன் , ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகை ஸ்ரீபிரியா, 1988-ஆம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு சினேகா மற்றும் நாக அர்ஜூன் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் சினேகா லண்டலின் லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கும் அங்கு லண்டன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரியும் அன்மோல் ஷர்மா என்வருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வீட்டில் சொல்லவே அவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். பின்னர் இவருக்கும் கடந்த மாதம் லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சினேகா மற்றும் அன்மோல் ஷர்மா திருமணம் லண்டனில் ஏற்கனவே சட்டப்படி பதி்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று சென்னையில் பிரம்மாண்ட முறையில் தென்னிந்தியர்கள் முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இதில் திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்துக்கொண்டனர். திருமணத்திற்கு முன்னதாக வட இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி மூன்று நாட்கள் சங்கீத் , மருதாணி வைக்கும் கொண்டாட்டங்கள் போன்றவை நடைப்பெற்றது.
இதில் 80-களில் ஸ்ரீபிரியாவுடன் நடித்த சக நடிகைகளான ராதிகா, சரிதா, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடிகைகள் கலந்துகொண்டர். பார்ப்பதற்கே 80-களின் நாயகிகள் ரீ யூனியன் போல இருந்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.