90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 'அம்மா வந்தாச்சி' , ;'ரிக்ஷா மாமா' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் காதல் வைரஸ்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஜீவாவுடன் நடித்த தித்திக்குதே , மாதவனுடன் பிரியமான தோழி ஆகிய படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. தனுஷுடன் நடித்த தேவதையை கண்டேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் இருந்து விலகிய ஶ்ரீதேவி விஜயகுமார் தற்போது சின்னத் திரை நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.
குறைவான படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் இவருக்கு எப்போதும் நற்பெயர் இருந்து வருகிறது. இளமை குறையாத இவரது அழகிற்கு இன்றும் ரசிகர்கள் உள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஶ்ரீதேவி விஜயகுமார் கலந்துகொண்டு ரேம்ப் வாக் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 38 வயதை எட்டியும் இன்றைய இளம் நடிகைகளுக்கு சவால்விடும் படி ஶ்ரீதேவி விஜயகுமாரின் அழகை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.