Sri Reddy on Vishal: என்கிட்ட நிறைய செருப்பு இருக்கு.. விஷாலை தாக்கிய நடிகை ஸ்ரீ ரெட்டி?

நடிகர் விஷாலை மறைமுகமாக தாக்கும்படி நடிகை ஸ்ரீரெட்டியில் ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

Continues below advertisement

ஹேமா கமிட்டி குறித்து நடிகர் விஷால்

நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேரளா ஹேமா கமிட்டி குறித்து பேசிய விஷால், "தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்துள்ளார்கள்.

Continues below advertisement

20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள் அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்படம் எடுக்கிறவர்களா? என்பது குறித்து சுதாரித்து கொள்ள வேண்டும்.

ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும், தமிழ் திரைப்பட உலகில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது விரைவில் அமைக்கப்படும்

யாரோ ஒருவர் பைத்தியக்கார தனமாக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு வியம் என்ன என்றால் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும், அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும், யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் 

என விஷால் பேசியிருந்தார். மேலும் ஸ்ரீரெட்டி விஷால் மீது பாலியல் புகார் அளித்தது குறித்த கேள்வி எழுந்தபோது நடிகர் விஷால் " ஸ்ரீரெட்டி யாரென்றே எனக்கு தெரியாது அவர் செய்த சேட்டைகள் தான் எனக்கு தெரியும். ஆதாரமில்லாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது தவறானது " என கூறினார். இதனைத் தொடர்ந்து பிரபல யூடியூபர் மற்றும் நடிகை ஸ்ரீ ரெட்டியின் எக்ஸ் தள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் பற்றி ஸ்ரீ ரெட்டி

"ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கருத்தைச் சொல்வதற்கு முன்னால் உன் நாக்கு கவனமாக இருக்க  வேண்டும்.  பெண்களைப் பற்றி அவதூறாக பேசுவது,  சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் தொந்தரவு கொடுப்பதும் எல்லாருக்கும் தெரியும் நீ எவ்வளவு பெரிய ஃப்ராட் என்று. ஊடகத்தின் முன் உன்னைப் பற்றிய இத்தனை உண்மைகள் தெரிந்தபின்னும் உன்னை ஜெண்டில்மேன் என்று மக்கள் நம்புவார்கள் என்று நினைக்காதே. உன் வாழ்க்கையில் இருந்த பெண்கள் உன் திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனது எல்லாம் ஏன் என்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று உனக்கு வேண்டுமா?" என கடுமையாக திட்டி ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். 

அவர் நடிகர் விஷாலை குறிப்பிட்டு தான் இந்த பதிவை பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்

Continues below advertisement
Sponsored Links by Taboola