முன்னணி நடிகையான ஶ்ரீலீலா மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான திலக் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வதந்திகளுக்கு தற்போது ஶ்ரீலீலா தரப்பு விளக்கமளித்துள்ளது.

Continues below advertisement

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஶ்ரீலீலா சிவகார்த்திகேயன் நடித்த பரசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். நடிகை தவிர இவர் அண்மையில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். ஶ்ரீலீலாவின் காதல் வாழ்க்கைக் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியபடி உள்ளன. அந்த வகையில் தற்போது கிரிக்கெட் வீரர் திலக் வர்மா மற்றும் ஶ்ரீலீலா இருவரும் டேட் செய்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் காட்டுத்தீப் போல் பரவி வந்தது. கடந்த ஆண்டு ஶ்ரீலீலா மற்றும் திலக் வர்மா இருவரும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு ஒரே நாளில் சென்றிருந்தார்கள். இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் இருவரும்  கடந்த ஒரு ஆண்டுகாலமாக காதலித்து வருவதாகவும் வதந்திகளை பரப்பத் தொடங்கினார்கள். நிலைமை ஒருகட்டத்திற்கு மேல் கையை மீறி செல்ல ஶ்ரீலீலா தரப்பில் இருந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். 

Continues below advertisement

ஶ்ரீலீலா தரப்பு விளக்கம்

கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் நடிகை ஸ்ரீலீலாவை தொடர்புபடுத்தி பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என அவரது குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளனர். ஒரு அறிக்கையில், அக்குழுவினர் பின்வருமாறு கூறியுள்ளனர் "திலக் வர்மா மற்றும் ஸ்ரீலீலாவைச் சுற்றியுள்ள வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை. இருவரும் ஒருபோதும் பழகியதில்லை. இந்த யூகங்களில் துளியும் உண்மை இல்லை, மேலும் இதுபோன்ற புனையப்பட்ட கதைகளை எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி பரப்பக்கூடாது." மேலும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செய்தி வெளியிடும்போது பொறுப்புடன் செயல்படுமாறும் ஊடகத் தளங்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் அக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.