தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். சமீபகாலமாக இவரது செயல்பாடுகள் அரசியலுக்கு அச்சாரமிடுவது போலவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இவர் நடிப்பில் வெளியாக உள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
ஆன்மீக உணர்வு:
சென்னை, தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஸ்ரீலீலா பேசியதாவது,
"தனுஷ் நடந்து வரும்போது அவர் மீது திருநீறு வாசனை வரும். அது ஒரு விதமான ஆன்மீக உணர்வைத் தருகிறது. இங்குள்ள பலருக்கும் நான் சொல்லப்போகும் விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கு முதன்முதலில் மிகப்பெரிய நடிகர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷிடமே ஆகும். நான் அவரின் ரசிகை மற்றும் இந்திய சினிமாவின் மகுடத்துடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
இவ்வாறு அவர் பேசினார்.
நட்சத்திர பட்டாளம்:
அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடித்துள்ளார். இவர்களுடன் சாய் பல்லவி, நஸ்ரூதின் ஷா, இந்திரன்ஸ் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் சில ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆன்மீகத்தில் நாட்டம்:
கன்னடம், தெலுங்கு படங்கள் மூலமாக மிகவும் பிரபலமான ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி படம் மூலமாக அறிமுகமானார். தற்போது தமிழில் அவரது இரண்டாவது படமான ஓம் படம் வெளியாகிறது. தனுஷ் சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிகளவு நாட்டம் காட்டி வருகிறார். இதன் ஒரு அங்கமாகவே இந்த படத்திற்கு ஓம் என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், அரசியலில் களமிறங்க அச்சாரமிட்டு வரும் தனுஷிற்கு இதுவும் ஒரு பக்கபலமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
