நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல எனவும் அது கொலை எனவும் வெளியாகியுள்ள தகவல் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


1972ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிறந்த சௌந்தர்யா, கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். நந்தி விருது, கர்நாடக அரசின் மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஆகியவற்றையும் பெற்றிருந்தார்.


தனது குழந்தை தனமான பேச்சாலும் திறமையான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சூர்யவன்ஷம் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்தார். இவரது கடைசி படம் ஆப்தமித்ரா. விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்துடன் நடித்திருந்தார்.


முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, ரஜினி, கமல், மோகன்லால், வெங்கடேஷ் பாபு, நாகார்ஜுனா, ஸ்ரீகாந்த், ஜெகபதிபாபு, அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார்.


2003ஆம் ஆண்டு ஜி.எஸ் ரகு என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன்பின்னர் பாஜகவில் இணைந்த நடிகை சௌவுந்தர்யா கடந்த 2004ஆம் ஆண்டு தனது 31வது வயதில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த நேரத்தில் கர்ப்பமாக இருந்ததும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவரது உடல் அப்போது கிடைக்கவில்லை.



கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் சௌந்தர்யாவின் மரணம் புயலை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர்தான். இவர் 21 வருடம் கழித்து சௌந்தர்யா மரணத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.


அந்த புகாரில் “நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல. அது கொலை. சௌந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க தெலுங்கின் பிரபல நடிகர் மோகன் பாபு வாங்க முயற்சி செய்தார்.


அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் நிலத்தை விற்க முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகு அவரது சகோதரரை மிரட்டி மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக் அபகரித்துள்ளார்.


ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!


எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும். இந்த 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன்பாபுவுக்கும் மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டது.


இதில் மோகன் பாபுவை விசாரிக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.