செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அவரது நிதானம் மற்றும் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. காதல் கொண்டேன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி' மற்றும் 'புதுப்பேட்டை' போன்ற அடுத்தடுத்த வெற்றிப் படங்களிலும் சோனியா அகர்வால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 




இந்த படங்களில் ஒன்றாக இணைந்தது மூலம் நடிகை சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து, சில வருடங்கள் இவர்கள் இருவரும் காதல் செய்து வந்தநிலையில் கடந்த 2006ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010ல் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதன்பிறகு செல்வராகவன் தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை கடந்த 2011 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து, சோனியா அகர்வால் யாரையும் திருமணம் செய்யாமல்  தனிமையில் இருக்கிறார்.


இந்தநிலையில், மிக நீண்ட காலமாக தனிமையில் இருந்த சோனியா அகர்வால் தனது திருமண உறவு முறிவு குறித்து தனியார் யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் "செல்வராகவனுடன் பணிபுரிந்தபோது அவருடைய கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து, அவரைப் பாராட்டினேன். பின்னர் எங்கள் நட்பு ஒரு கட்டத்தில்காதலாக மாற, கடந்த 2006 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் முடிந்து சில மாதங்கள் வரை நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.


செல்வராகவன் பொதுவாக ஒரு விஷயத்திற்கு அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுக்கமாட்டார். அது சினிமா படப்படிப்பில் ஒரு காட்சி சரியாக வரவில்லை எனில், அந்த காட்சி அவருக்கு மனநிறைவு பெறும்வரை எத்தனை டேக் ஆனாலும் எடுத்துக்கொண்டே இருப்பார். இப்படியே தான் திருமண வாழ்க்கையிலும். எங்கள் இருவரும் எந்தவொரு விசயத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனபான்மை இல்லை. எங்களுக்கான இடம் கிடைக்கவில்லை. அதுவே எங்களுக்கு பெரிய அளவில் மனஅழுத்ததை தந்தது. எங்களுக்கு விவாகரத்து தேவைப்பட்டது. அதனால்தான் நான் மிகுந்த மன வேதனையுடன் அவரைப் பிரிந்தேன்.


திருமணத்தின்போது எவ்வளவு மகிழ்ச்சியுடன் இணைந்தோமோ..? அதே அளவு வருத்தத்துடன் விவாகரத்தின்போது பிரிந்தோம்” என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண