கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்ருதிக்கா.  அதன் பிறகு தித்திக்குதே, நளதமயந்தி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர் , சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு திருமண வாழ்க்கையில் இறங்கிவிட்டார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மீண்டும் களமிறங்கியிருக்கும்  ஸ்ருத்திகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவரது வெகுளித்தனமான பேச்சிற்காகவே ஏகப்பட்ட ஆர்மிஸ் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் ஸ்ருத்திகா தனது சினிமா மற்றும் சொந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 






அதில் “ சூர்யா சார் நந்தா படத்திற்கு பிறகு மிகப்பெரிய நடிகராகிவிட்டார். பாவம் தெரியாம என்கூட நடித்துவிட்டார். அந்த படம் நடிக்கும் பொழுது என்னை குழந்தை போலத்தான் பார்த்துக்கொள்வார். ஸ்கூல் போனியா, எக்ஸாம் எழுதினியா என அதை பற்றித்தான் கேட்பார். அவருக்கு  ஆட்டிட்டியூடே கிடையாது. நான் சின்ன வயதா இருக்கும்பொழுதே எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். என்னுடைய வயதிற்கு லவ் லெட்டர் , ரோஸ் அதுபோல எதிர்பார்த்தேன். ஆனால் அர்ஜூனிற்கு காதலை வெளிபடுத்த தெரியாது. எனக்கு முதல்ல அர்ஜுனை பிடிக்கவே இல்லை.  அதன் பிறகு ரொம்ப பிடிச்சிருச்சு . காரணம் எனக்கு ஸ்கூல்ல இருந்தே யாரை பிடிக்கலைனு சொல்லுறேனோ அவங்கதான் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டா மாறிடுவாங்க.





ஆரம்பத்துல கழுத்துல கிஸ் பண்ணினா கூட குழந்தை பிறந்திடும்னு நினைச்ச பொண்ணு நான் . ஆடை அணியும் பொழுது , நாகரீகமாக இருக்க வேண்டும் என நினைப்பவள் , என்கூட யாருமே ஃப்லர்ட் பண்ணதே இல்லை. எனக்கு பெண்களை விட ஆண் நண்பர்கள்தான் அதிகம் . என்னை காதலிப்பதாக  நிறைய பேர் சொல்லியிருக்காங்க . அதை நான் ஊக்குவிக்க மாட்டேன் . தவிர்த்துவிடுவேன். என் கணவர் என்ன தவறு செய்தாலும் மன்னிப்பேன் . ஆனால்  வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்தால் மன்னிக்கவே மாட்டேன் என சொல்லியிருக்கிறேன்“ என வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஸ்ருதிக்கா.