பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனாவின் முந்தைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
1980-1990 களில் வெளியான தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. கமல்ஹாசன், ரஜினிகாந்த் , பாக்கியராஜ் , விஜயகாந்த் என அப்போது சினிமாவை ஆட்டிப்படைத்த பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஷோபனா ஒரு திறமையான பரதநாட்டிய கலைஞரும் கூட. தற்போது பல மாணவர்களுக்கு பரதநாட்டிய வகுப்புகளும் எடுத்து வருகிறார். தன் ஆசிரியர்களிடன் இருந்து கற்ற சில பரத நுணுக்கங்களையும் கூட , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்..
இந்நிலையில் ஷோபனா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு , நடிகை குட்டி பத்மினியில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது சினிமா மற்றும் நடன அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார். ரஜினிகாந்த் , ஷோபனா நடிப்பில் வெளியான தளபதி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதில் இசைஞானி இளையராஜாவின் பங்கும் முக்கியமானது. நேர்காணலின் போது தளபதி படத்தின் ஹிட் பாடல்களுள் ஒன்றான ,”யமுனை ஆற்றிலே” பாடல் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார் நடிகை குட்டி பத்மினி. அதாவது “எவ்வளவோ படங்கள் வந்துவிட்டது..ஆனாலும் இன்றளவும் இளைஞர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கிறது “யமுனை ஆற்றிலே ...” அந்த பாடலுக்கு அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது ?” என கேட்க, அதற்கு பதிலளித்த ஷோபனா “ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர்கள் இருந்தார்கள்..பாரதிராஜா சார், பாலச்சந்தர் சார், மணிரத்தினம் ஜி என பலர் இருந்தனர். மணிரத்தினம் ஒரு புது மலர்ச்சியை கொண்டுவந்தார்... எப்போதும் மார்டனாக படம் எடுக்கும் அவர் , எமோஷ்னலுடன் கூடிய ஒரு பாடலை கொண்டுவந்தார். உண்மையில் அந்த பாடல்தான் காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது என்பதல்ல...எல்லா பாடல்களிலும் அதன் எமோஷ்னல் கிராஃப் சரியில்லை என்றால் அந்த பாடல் ஹிட்டாவதற்கு வாய்ப்பே இல்லை... இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த பாடலை நினைத்தால் ரஜினிகாந்தின் ரொமான்ஸ், அந்த பெண் அப்பாவியாக வீணை வாசிப்பது போன்ற காட்சிகள்தான் நம்மை அறியாமல் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும். அந்த காட்சிகளை மணிரத்தினம் அவர்கள் அப்படியாக எடுத்திருப்பார்..யமுனை ஆற்றிலே என்பது ஒரு சாதாரண பாடல் ...எளிமையான ஒரு பாட்டை அழகாக பாடுறதுதான் பாட்டு!....அதுனாலதான் அந்த பாட்டு நம்ம எல்லோருக்கும் புரிஞ்சது “ என குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானியின் இசைகளிலேயே பலருக்கும் பிடித்தமான பாடல்களுள் ஒன்று “யமுனை ஆற்றிலே ...ஈரக்காற்றிலே ..” ஒரு அதிகாலை நேரத்தில் , அந்த பாடலுடன் ஒரு கோப்பை தேநீர் குடித்தால் அத்தனை இதமாக இருக்கும் என இளையராஜா ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை பார்த்திருக்கிறோம். இந்த சூழலில் ஷோபனாவின கருத்தை பகிர்ந்த இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.