ஊரே மிக்ஜாம் புயலால் அவதிப்பட்ட நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கக்கடலில் உருவாகி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை திக்குமுக்காடி போனது எந்த பக்கம் போனாலும் தண்ணீர் சூழந்த தேசமாக மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் சென்னை மக்கள் சற்று மிரண்டு தான் போயினர்.
டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மழை பெய்த நிலையில், 5 ஆம் தேதி முதல் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் புயல் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்கிறது.
இப்படியான நிலையில் திரைத்துறை பிரபலங்களும் மக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்கள் ரசிகர்களையும் மக்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியுள்ளனர். சில பிரபலங்களை தமிழ்நாடு அரசையும், சென்னை மாநகராட்சியையும் நேரடியாக விமர்சித்தனர். இப்படியான நிலையில் இளம் நடிகையான ஷிவானி நாராயணன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
மிக்ஜாம் புயலால் சூறைக்காற்றுடன், மழை பெய்த நிலையில், ஷிவானி அதில் டான்ஸ் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். அதன் பின்னணியில் பிரசாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் இடம்பெற்ற “மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது” பாடலை ஒலிக்க விட்டுள்ளார். இதனைக் கண்ட இணையவாசிகள், ‘புயல்ல இதுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குது, அவன் அவன் புயல்ல சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுறான்.. உனக்கு சிச்சுவேஷன் பாட்டு கேக்குதா, அந்த புயலே நீங்க தான், எவன் எப்படி போனா என்ன எனக்கு இன்ஸ்டா போஸ்ட் முக்கியம்ன்னு நினைக்கிறீங்களா?, என்னோட வீட்டுக்கு வந்து பாதுகாப்பா இருங்க” என சகட்டுமேனிக்கு கமெண்டுகளை அள்ளி வீசியுள்ளனர்.
நடிப்பில் ஆர்வம் கொண்ட ஷிவானி 10 ஆம் வகுப்பு முடித்த கையுடன் திரைத்துறைக்குள் நடிக்க வந்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி 3, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என சில சீரியல்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்றார். சினிமாவில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து வீட்ல விஷேசம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Suriya-Karthi: ‘விமர்சனங்களை விட்டு தள்ளவும்’.. நிவாரண பணிக்கு உதவுமாறு சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு அழைப்பு..!