பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் நேர்காணல் ஒன்றில் தனது மகன் படம் ஒன்றில் நடித்த காட்சிக்காக பிரிந்து இருந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 


1980 ஆம் ஆண்டு வெளியான Stardust Memories என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷரோன் ஸ்டோன். தொடர்ந்து  Les Uns et les Autres, Deadly Blessing, Cold Steel, Total Recall உள்ளிட்ட 17 படங்களில் நடித்த அவரின் 18வது படமாக  Basic Instinct படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஷரோன் ஸ்டோன்1984 ஆம் ஆண்டில், தொலைக்காட்சி தயாரிப்பாளர் மைக்கேல் கிரீன்பர்க்கை முதலில் திருமணம் செய்து கொண்டார்.


இந்த தம்பதியினர் அடுத்த 3 ஆண்டுகளில் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தயாரிப்பாளரான வில்லியம் ஜே. மெக்டொனால்டை நிச்சயம் செய்தார். ஆனால் திருமணம் செய்யாமலேயே 1994 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். பின்னர் அதே ஆண்டில் தி குயிக் அண்ட் தி டெட் திரைப்படத்தில் பணிபுரிந்தபோது , ​​உதவி இயக்குநரான பாப் வாக்னரைச் சந்தித்தார். இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில் பிரிந்தனர். 


இதற்கிடையில் ஷரோன் ஸ்டோன் 1998 ஆம் ஆண்டு தி சான் பிரான்சிஸ்கோ எக்ஸாமினர் என்ற இதழின் நிர்வாக ஆசிரியர் பில் ப்ரோன்ஸ்டீனை மணந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில் 2000 ஆம் ஆண்டு ரோன் ஜோசப் ப்ரோன்ஸ்டீன் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்தனர். ஆனால் 2003 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஷரோன் ஸ்டோன், தான் நடித்து, தனக்கான அங்கீகாரம் கொடுத்த Basic Instinct  படம் தன் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தில் நிர்வாண காட்சி ஒன்று இடம் பெற்றது. அதாவது 16 வினாடிகள் மட்டுமே இடம் பெற்ற காட்சியில் ஷரோன் ஸ்டோன் காலை மட்டும் காட்டியிருப்பார்கள். ஒரே இரவில் அவருக்கு ஸ்டார் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் அப்படம் பெற்றுக் கொடுத்தது. 


தன் கணவர் பில் ப்ரோன்ஸ்டீனுடனான விவாகரத்து வழக்கின் போது நீதிமன்றத்தில் என் மகனிடம், நான் குறிப்பிட்ட அந்த காட்சியில் நிர்வாணமாக நடித்தது பற்றி கேட்கப்பட்டது. இது உங்களுக்கு தெரியுமா என கேட்டார்கள். இதன் முடிவில் என் மகனை வளர்க்கும் பொறுப்பு என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. மேலும் Basic Instinct படத்திற்காக நான் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டேன். 


நிகழ்வில் என் பெயர் வாசிக்கப்பட்டபோது அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் நடிப்பது எவ்வளவு கடினமாக இருந்தது என்று யாருக்காவது தெரியுமா?. இப்படத்திற்கு தேர்வு செய்யப்பட்டபோது இந்த காட்ச்சிக்காக ஒன்பது மாதங்கள் அதற்காக ஆடிஷன் செய்தேன் என தெரிவித்துள்ளார்.