நடிகர் மோகன்லாலுக்கு நன்றியே இல்லை என பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய 12வது வயதில் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல படங்களில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்து பிரபலமான இவர் 2001 ஆம் ஆண்டில் சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரீ கொடுத்தார்.
மறைந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை 1979 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சாந்திக்கு 4 குழந்தைகள் உள்ளனர். வில்லியம்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் சாந்தி வில்லியம்ஸூக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரு தளங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசும்போது, நடிகர் மோகன்லாலை தாறுமாறாக விமர்சித்துள்ளார். அதாவது, “மோகன்லாலுக்கு நிறைய சமைத்து கொடுத்திருக்கிறேன். ஆனால் அவருக்கு நன்றியே இல்லை. தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம். என்னுடைய கணவர் வில்லியம்ஸ் அவ்வளவு பெரிய கேமரா மேன். இன்னைக்கு காலகட்டத்தில் கூட யாராலும் மேலே கயிறு கட்டி ஏறி வேலை பார்ப்பவர். அவர் தொழில் ரீதியாக சிறப்பானவர். மோகன்லாலின் இரண்டாவது படமாக “ஹலோ மெட்ராஸ் கேர்ள்” வெளியானது. அந்த படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். இது எங்களுடைய படம். பூர்ணிமா பாக்யராஜ், ஊர்வசி ஆகியோரும் நடித்திருப்பார்கள்.
எங்கள் வீட்டுக்கு வந்தால் நேரடியாக சமையலறைக்கு சென்று மீன் செய்து கொடுக்க சொல்லுவார். அவரே கேரியர் எல்லாம் கொண்டு வந்து சாப்பாடு வாங்கி செல்லுவார். என் கணவர் இறந்தப்ப வரவே இல்லை. உலகத்துக்கே பிடித்த மோகன்லாலை எனக்கு சுத்தமாக பிடிக்காது. வில்லியம்ஸ் அவரை வைத்து 4 படங்கள் பண்ணினார். நான் நிறை மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது மோகன்லாலுக்கு காசு கொடுக்க என் நகையெல்லாம் விற்று கொடுத்தேன். என் கணவர் லால்..லால் என அவரையே சுற்றி சுற்றி வந்தார். ஆனால் இவரோ ஏர்போர்ட்டில் என்னை பார்த்து தலைதெறிக்க ஓடினார். இவனுக்கு என்னைக்குமே என்கிட்ட மரியாதை கிடையாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Shanthi Williams: திருமணத்தன்று வீட்டை விட்டு ஓட்டம்.. அப்பாவால் சோகமாக மாறிய சாந்தி வில்லியம்ஸ் வாழ்க்கை!