இயக்குநர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் கடந்த 2018ஆம் ஆண்டு சர்க்கார் படம் வெளியானது. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். ஆனால் படம் தோல்வி அடைந்தது. 4 ஆண்டுகளாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மதராஸி படம் இன்று வெளியாகியுள்ளது.
கம்பேக் கொடுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களையே அளித்துள்ளனர். படம் முழுக்க ஆக்சன் தான். சிவகார்த்திகேயன் சும்மா பட்டையை கிளப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் கொடுத்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் தக்க வைத்துக்கொண்டாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா என்பதையும் அலசி ஆராய்ந்து திரை விமர்சகர்கள் மதராஸி படம் குறித்து பேசி வருகின்றனர்.
மதராஸி படம் எப்படி இருக்கு?
இந்நிலையில், மதராஸி படத்தின் முதல் காட்சி.யை பார்க்க திரை பிரபலங்கள் பலரும் ஆவலோடு திரையரங்கிற்கு வரிசை கட்டி வந்தார்கள். அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி மதராஸி படத்தை பார்த்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த ஷாலினியிடம் படம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஷாலினி நான் இந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணேன். சூப்பர் என சொல்லிவிட்டு சென்றார்.