அப்போதெல்லாம், ஆர்யாவின் திருமணம் பற்றி எப்போதுமே திரையுலகில் ஏதாவது வதந்தி வந்து கொண்டே இருக்கும். கலர்ஸ் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கூட ஆர்யாவின் திருமண சர்ச்சைகளையே கருவாக்கி உருவானது தான். அந்த நிகழ்ச்சியில் அழகுப் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ணக் காத்திருக்க, இறுதிச் சுற்றில் முடிவைச் சொல்லாமல் கல்தா கொடுத்தார் ஆர்யா.






இதனால், பல அழகிய இதயங்கள் நொறுங்கிப் போயின. அந்த நேரத்தில்தான் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் ஆர்யா. அப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2019ல் கரம்பிடித்தனர். சாயிஷா தம்பதிக்கு ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆர்யா- சாயிஷா தம்பதியினர் சந்தோஷத்தில் மூழ்கினர்.






இந்த நிலையில் தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகியுள்ள சாயிஷா மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆகவுள்ளதாக தெரிகிறது. இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹாட்டாக போட்டோஷூட் நடத்தியிருக்கும் சாயிஷா சினிமா எண்ட்ரியை மறைமுகமாக தெரிவிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்தபிறகும் இப்படியான போட்டோஷூட் ஏன் என சிலர் கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில், குழந்தை பிறப்புக்கும் போட்டோஷூட்டுக்கும் என்ன தொடர்பு, அதெல்லாம் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என சாயிஷாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.