Sanam Shetty: உச்சகட்ட கவர்ச்சி.. ரசிகர்களை கவரும் சனம் ஷெட்டி.. இணையத்தில் போட்டோஸ் வைரல்!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவார். இந்நிலையில் வெள்ளை நிற பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் சனம் ஷெட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

பிரபல நடிகை சனம் ஷெட்டி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

பொதுவாக பெண் திரைப்பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகுவார்கள். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத ஹீரோயின்களிடம் இருந்து வரும் இதுபோன்ற பதிவுகள் ஒட்டுமொத்த திரையுலகினரிடையேயும் பேசுபொருளாக மாறிவிடும். அப்படி இந்த வார இறுதியை பேசுபொருளாக மாற்றியுள்ளார் சனம் ஷெட்டி. 

கடந்த 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி பெங்களூரில் பிறந்த நடிகை தான் சனம் ஷெட்டி கல்லூரி படிக்கும்போதே மாடலிங்கில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். அதே ஆண்டில் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன்பின்னர் மாயை, தொட்டால் விடாது, மாயை, கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, டிக்கெட், வால்டர், ஊமை செந்நாய், மஹா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தற்போது எதிர்வினையாற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சனம் ஷெட்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். இவருக்கும் தர்ஷன் தியாகராஜா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் கைவிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷனம் ஷெட்டி 63வது நாளில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இதன்பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய தொடங்கினார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவார். இந்நிலையில் வெள்ளை நிற பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “தூக்கம் தொலைத்த இரவு.. இன்று முதல் நான் உங்கள் ரசிகன்.. இவ்வளவு அழகை எங்க மறைச்சு வச்சிருந்தீங்க” என விதவிதமான கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola