இந்தியா டுடே கான்க்ளேவ் 2024ன் நிகழ்ச்சியின் முதல் நாள் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக நடிகர் சமந்தாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவருக்கு 'ஸ்ப்ளெண்டிட் மிஸ் சமந்தா : ஃபேமிலி மேன் முதல் சமந்தா வரை' என்ற தலைப்பில் வரவேற்கப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய பாலுணர்வு எப்போதுமே சங்கடமாக இருப்பதை பற்றி பேசி இருந்தார்.
தன்னுடைய நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை சமந்தா 'தி ஃபேமிலி மேன்' மற்றும் 'புஷ்பா' படங்களில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சுகுமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பதில் வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா..' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த பாடலில் அவரின் நடனம் எப்படி சவாலாக இருந்தது என்பது குறித்து பேசி இருந்தார்.
ஓ சொல்றியா மாமா... பாடல் 'தி ஃபேமிலி மேன் 2' படத்தில் இடம்பெற்ற ராஜி கதாபாத்திரம் போலவே தான். உங்களைச் சுற்றி அதிக மக்கள் இல்லாதது கூட ஒரு வகையில் நல்லது என்று தான் நினைக்கிறன். தேவையில்லாத கருத்துக்கள் உங்கள் காதுகளுக்கு வராது. அதன் மறுபக்கம் நான் தவறுகள் மூலம் கற்றுக்கொண்டு என்னுடைய உள்ளுணர்வை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறேன். அந்த முகத்தை தான் 'ஓ சொல்றியா' மாமா மூலம் ஒரு நடிகையாக என்னுடைய இன்னொரு முகத்தை ஆராய நினைத்தேன். ஒரு நடிகையாக இருப்பதால் நான் எப்போதும் என் பாலுணர்வால் மிகவும் சங்கடமாக உணர்கிறேன். அது எனக்கு வசதியாகவோ நம்பிக்கையாகவோ இல்லை. "நான் அவ்வளவு அழகாக இல்லை, அந்த அளவுக்கு போதுமானதாக இல்லை. நான் மற்ற பெண்களை போல் இல்லை" என்ற எண்ணத்தில் இருந்து தான் செயல்பட விரும்புகிறேன்.
சமந்தா எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசுகையில் "எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது 'ஓ சொல்றியா' பாடலின் முதல் ஷாட் தான். கிளாமர் என்பது என்னுடையது அல்ல என்பதால் முதலில் நான் பயந்து நடுங்கினேன். ஒரு நடிகையாக ஒரு மனிதனாக நான் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் நான் கடினமான சூழ்நிலைகளில் என்னை ஈடுபடுத்தி அதை கடக்க போராடினேன். அதை அரக்கர்களை வதம் செய்வது போல செய்தேன்” என்றார்.
இடையில் நடிகை சமந்தா தன்னுடைய நடிப்பு பயணத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்து இருந்தார். சிட்டாடல் ஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸின் இந்திய பதிப்பில் வருண் தவான் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.