நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது. 


ஹரிஹரிஷ் இயக்கியுள்ள  யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார்.  ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்  தயாரித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.






மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் இன்றைய தினம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. முன்னதாக படத்திற்காக சமந்தா கடுமையாக உழைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில் myositis என்னும் அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் சமந்தா ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கினார்.


இந்நிலையில் இன்றைய தினம் காலை முதல் காட்சி யசோதா படம் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், சமந்தா நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சமந்தா மகிழ்ச்சியடைந்துள்ளார்.