கல்லூரியில் மாணவர்களுடன் சமந்தா போட்ட குத்தாட்டம்...வைரலாகும் வீடியோ
சென்னை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகியுள்ளது

சமந்தா
நடிகை சமந்தா 2023 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து பிரேக் அறிவித்தார். கடைசியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்த சமந்தா சினிமவில் இருந்து ஓரு வருடம் பிரேக் எடுத்துக் கொண்டார். மையோசிடிஸ் சிகிச்சை , உடற்பயிற்சி , ஆன்மிகம் என இந்த ஒரு வருடத்தை செலவிட்டார் சமந்தா. தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் சமந்தா. பல நேரங்களில் ரசிகர்களின் விமர்சனத்திற்குள் உள்ளாகி வருகிறார்.
தயாரிப்பாளராக களமிறங்கும் சமந்தா
தற்போது சமந்தா தெலுங்கில் ' மா இந்தி பங்காரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலமாக அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாக இருக்கிறார். ட்ரலலா பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள சமந்தா தனது முதல் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படத்தின் திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Just In




கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம்
இதனிடையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சமந்தா சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் சமந்தா சமீபத்தில் சென்னை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமந்தா தான் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல பாடலான டிப்பம் டப்பம் பாடலுக்கு நடனமாடினார். ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கப்பட்ட அவர் பின் கான்ஃபிடண்டாக ஆடத் தொடங்கினார். நிகழ்ச்சியில் இருந்த கூட்டம் ஆரவாரம் செய்து கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.