HBD Sakshi Agarwal : பிகினி உடையில் ஹாயாக பிறந்தநாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்! வைரல் போட்டோஸ்!

விடுமுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ள சாக்‌ஷி அகர்வால் அங்கு கருப்பு நிற பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

Continues below advertisement

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement

கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான படம் “ராஜா ராணி” . இந்த படத்தில் ஒரு காட்சியின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். முன்னதாக 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ள சாக்‌ஷி சில விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார். அதேபோல் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே இரண்டு கன்னடப் படங்களிள் சாக்‌ஷி நடித்திருந்தார். 

அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம், ஆர்யா நடித்த டெடி, அரண்மனை -3 ஆகிய படங்களில் நடித்த பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் இன்று தனது 32 வது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார். தற்போது விடுமுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ள சாக்‌ஷி அகர்வால் அங்கு கருப்பு நிற பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola