வைரலாகும் சாய் பல்லவி ஏ.ஐ புகைப்படங்கள்
நடிகை சாய் பல்லவியின் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தங்கையுடன் சாய் பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை. ஏ.ஐ மூலம் நடிகைகளின் போலி புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் நிலையில் தற்போது சாய் பல்லவியின் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்
திட்டமிட்ட சதியா
இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நடிப்பது பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக தொடர்ச்சியாக நெகட்டிவ் விஷயங்களை பரப்பி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி சாய் பல்லவி பேசியது, அசைவம் சாப்பிடுவது குறித்த சர்ச்சை என சாய் பல்லவிக்கு எதிராக தொடர்ச்சியாக சர்ச்சைகள் கிளம்பியபடியே இருக்கின்றன.