இயக்குனர் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பில் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் நடிகை ரேவதி தனது இயல்பான யதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை சங்கிலி போட்டு காட்டியவர். இன்றும் எள்ளளவும் கூறியதை அன்போடு ரசிகர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட குட்டி சாவித்திரி என கொண்டாடப்பட்ட ரேவதியின்  57 வது பிறந்தநாள் இன்று.    




கேரள பெண்ணான ரேவதி 1983ம் ஆண்டு அறிமுகமான முதல் படம் 'மண்வாசனை'. படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே தமிழ்நாட்டின் மண்வாசனையை பிரதிபலிக்கும் ஒரு முகமாக தெக்கத்திப் பெண் முத்துப்பேச்சியாகவே வாழ்ந்து இருந்தார் ரேவதி. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாத ஒரு பொண்ணு பாரதிராஜாவின் கண்டிஷனால் தமிழை படாத பாடு பட்டு கற்றுக்கொண்டு பத்தே நாட்களில் கொஞ்சமும் மலையாள மொழியின் கலப்படம் இல்லாமல் சுத்தமான உச்சரிப்புடன்  படத்திற்கு டப்பிங் பேசி முடித்துத்துள்ளார். 


'ஒரு தென்றல் புயலாகி வருதே' என்ற பாடலின் மூலம் அன்றே 'புதுமைபெண்' அவதாரம் எடுத்தவர் ரேவதி. தமிழ் திரையுலகத்தையே  திரும்பி பார்க்க வைத்த மிரட்டலான நடிப்பு. அதன் விளைவாக அடுக்கடுக்காக சவாலான கதாபாத்திரங்கள் குவிய துவங்கின. தனது ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட கூடிய  அசாதாரணமான நடிகை என்றே சொல்லலாம். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த படங்கள் தான் மௌன ராகம், வைதேகி காத்திருந்தாள்,  அவதாரம், அஞ்சலி, பகல் நிலவு, கன்னி ராசி, அரங்கேற்ற வேளை, ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன், கிழக்கு வாசல், ஆண்பாவம், உதயகீதம், மறுபடியும் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். 


 



எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் இயக்குநர்களின் எண்ணங்களை அப்படியே நடிப்பில் பிரதிபலிக்கும் ஹீரோயின்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பட்ட டைரக்டர்களின் பேவரட் சாய்ஸாக என்றுமே இருப்பவர் ரேவதி. வெயிட்டேஜ் உள்ள கதாபாத்திரமான தாயம்மாவாக, அப்பாவிதமான பஞ்சவர்ணமாக   அல்லது துறுதுறு பெண் மாஷா கதாபாத்திரம் இப்படி எது கொடுத்தாலும் தனது உடல் மொழி, முக பாவனை, ததும்பும் குரல் மூலம் உணர்ச்சிகளை கொட்டி சாதுரியமான தனித்துமான நடிப்பால் முத்திரை பதித்தவர் ரேவதி.


80'ஸ்களில் ரேவதியை இயக்காத இயக்குநர்களே இல்லை என்பதை போல அவருடன் டூயட் படாத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம். மாடர்ன் பெண்ணாக வெஸ்டர்ன் உடையிலும் பார்க்கலாம் கண்டாங்கி சேலை கட்டிய கிராமத்து பெண்ணாகவும் பார்க்கலாம். சில சமயங்களில் காட்டன் புடவை கட்டிய பெண்ணாகவும் ரேவதி மாறிவிடுவார். இப்படி எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் பொருந்த கூடியவர் ரேவதி. சிறந்த நடிகையாக எத்தனையோ விருதுகளை கைப்பற்றிய ரேவதி இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்தவர். இனி வரும் காலங்களிலும் ரேவதி போன்ற நடிகை வேணும் என சொல்லும் அளவுக்கு கிரீடம் சூட்டப்பட்ட ஒரு மகாநடிகை.  


ஒன்ஸ் மோர் இந்த இஞ்சி இடுப்பழகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!