தென்னிந்திய சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த நடிகைகளின் வரிசையில் இடம் பெற்ற ஒருவர் தான் நடிகை ரேணுகா மேனன். மலையாளத்தில் வெளியான 'நம்மள்' என்ற படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமான ரேணுகா மேனன் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக 2005ம் ஆண்டு வெளியான 'தாஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 


 


 



கிடுகிடு வளர்ச்சி : 


அதை தொடர்ந்து ஒரே ஆண்டில் பரத் ஜோடியாக 'பிப்ரவரி 14', ஆர்யா ஜோடியாக 'கலாபக் காதலன்' உள்ளிட்ட படங்களிலும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்து கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்து பிரபலமானார். 


திருமண வாழ்க்கை : 


ஒரே ஆண்டில் வேகவேகமாக திரைத்துறையில் வளர்ந்த நடிகை ரேணுகா மேனன் திடீரென சாப்ட்வேர் இன்ஜினியர் சூரஜ் குமாரை 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டார். குடும்பத்துடன் கலிபோர்னியாவில் செட்டிலான ரேணுகா மேனன் அதற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. 


நிறைவேறிய கனவு : 


கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வரும் ரேணுகா அங்கேயே ஒரு நடன பள்ளியை நடத்தி வருகிறார். நடிப்பில் பெரிய அளவு ஆர்வம் இல்லாத ரேணுகாவிற்கு வெளிநாட்டிற்கு சென்று  மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்துள்ளது. தன்னுடைய கனவை திருமணத்திற்கு பிறகு நிறைவேற்றி கொண்டார். 


குவிந்த வாய்ப்புகள் :


ரேணுகா மேனன் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அவருக்கு பல பட வாய்ப்புகள், நிகழ்ச்சி தொகுப்பாளராக தொகுத்து வழங்க வாய்ப்புகள் என பல வகையில் இருந்தும் வாய்ப்புகள் வந்த போதும் அவை அனைத்தையும் மறுத்துள்ளார். தற்போது தன்னுடைய வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக நடத்தி வரும்  ரேணுகாவுக்கு  சினிமாவில்  நடிக்க பெரிய அளவு ஈடுபாடும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லையாம். 



 


லேட்டஸ்ட் போட்டோ :


நடிப்பில் தான் ஆர்வம் இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் ரேணுகா மேனன் அவ்வப்போது தன்னுடைய ஃபேமிலி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி விடுவார். அந்த வகையில் தன்னுடைய கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். ரேணுகாவுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அப்படி இருந்தும் இன்றும் அதே அழகுடனும், இளமையுடனும் தோற்றமளிக்கிறார் என ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.