தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடைபெற்ற முதல் சந்திப்பு கண்ணீரில் முடிவடைந்தது பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கோபத்தில் திட்டிய விஜய் தேவரகொண்டா

அதாவது, கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது நான் அப்போது சினிமா துறைக்கு புதிதாக வந்தவள். விஜய் அப்போது 3,4 படங்களில் நடித்து அனுப்வம் பெற்றிருந்தார். தன்னை விட அதிக அனுபவம் வாய்ந்தவர் என்று  நினைத்ததால் நான் சார் என அழைத்தேன். முதல் நாள் படப்பிடிப்புத் தளத்தில் ஏதோ ஒரு இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அதனை நிறுத்து என விஜய் தேவரகொண்டா சொன்னார். அவர் கோபமாகி விட்டார் என நினைத்ததால் எனக்கு ஒருமாதிரியாகி விட்டது என ராஷ்மிகா தெரிவித்தார். 

Continues below advertisement

நிலைமையை உணர்த்திய கணவர்

ஆனால் பின்னர் அந்த நிலைமையை விஜய் அதே நேர்காணலில் விளக்கினார். தான் வெளிப்படையாகப் பேசும் ஆள் என்றும், நான் ஏதாவது சொல்லும்போது  எல்லோரும் என் நோக்கத்தைப் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன். ஒருவர் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும். சில சமயங்களில் ஒருவரை ஒருவர் முழுமையாக அறியாதபோது இந்த வார்த்தைகள் தவறாக போய் விட வாய்ப்புள்ளது. என்ன இந்த கேவலமான இசையை நீ போட்டுக் கொண்டிருக்கிறாய்? என நான் கேட்டேன். அதற்கு காரணம் நாம் பெரிய நட்சத்திரம் இல்லை என்பதால் ஒரு கேரவனை இரண்டாக பிரித்து ஒரு பாதி எனக்கும், மற்றொரு பாதி உனக்கும் கொடுத்திருக்கிறார்கள். இப்படி நீ கேவலமான இசையை நீ போட்டுக் கொண்டிருக்கிறாய்? நான் கத்தி கேட்டேன். அந்தக் கருத்து வேறுவிதமாக அமைந்து விட்டது. அந்தத் தருணத்தால் ராஷ்மிகா உண்மையில் மனம் புண்பட்டிருந்ததை நான் அறிந்துக் கொண்டேன். 

ராஷ்மிகாவை தனக்குப் பிடிக்கவில்லை என நினைத்து திட்டி விட்டார் என எண்ணி அவர் கண்களில் கண்ணீர் துளிகள் இருப்பதை கண்டேன். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் வெகு காலத்திற்கு பிறகே என்னிடம் சொன்னாள் என தெரிவித்தார். 

நான் ரொம்ப உணர்ச்சிவசப்படுவேன்

இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவளாக இருந்தேன். அதனால் அடிக்கடி அழுவேன். நான் விஜயை முதலில் சார் என அழைத்தேன். படப்பிடிப்பில் அவர் தான் எனக்கு வசனங்கள் பேச கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் விஜயை சார் என அழைப்பதை நிறுத்தினேன். அப்படி கூப்பிடுவதை விஜய் விரும்பவில்லை. எனக்கு ஒரு பெயர் இருக்கிறது, அதை சொல்லி கூப்பிடு என கண்டிப்பு காட்டுவார். அதனைத் தொடர்ந்தே நாங்கள் நண்பர்களானோம் என தெரிவித்துள்ளார். 

கன்னட சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா, முதல்முறை கீதா கோவிந்தம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின்னர் டியர் காம்ரேட் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. 2026ம் ஆண்டு பிப்வரியில் விஜய் - ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். மீண்டும் இந்த ஜோடி ரணபலி என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.