தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படம் 'டம்மி பட்டாசு'. அதனை தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். அதிலும் 2015ம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் அந்த ஆண்டிற்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


 


மொட்டைமாடி போட்டோஷூட் : 


தேசிய விருது பெற்ற படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவுக்கு ரம்யா பாண்டியனால் மக்களின் கவனம் பெற முடியவில்லை. இதன் கொஞ்சம் அப்செட்டாக இருந்த ரம்யா பாண்டியன் எடுத்து வைத்த அடுத்த ஸ்டேப் மொட்டைமாடி போட்ஷூட். இடுப்பழகை காண்பித்து அவர் எடுத்த அந்த போட்டோஷூட் உடனே வைரலானது. அதற்கு பிறகு பப்ளிசிட்டி பற்றி சொல்லவா வேண்டும். இளைஞர்களின் கனவு கன்னியனார். 


குவிந்த பட வாய்ப்புகள் :


படங்களில் நடித்த போது கூட ரம்யா பாண்டியனுக்கு இல்லாத வரவேற்பு ஒரு போட்டோஷூட்டுக்கு பிறகு டாப் கியரில் எகிறியது. அதற்கு பிறகு பட வாய்ப்புகளும் வாசலில் வந்து லைன் கட்டியது. ரம்யா பாண்டியன் எடுத்து வைத்த அடுத்த ஸ்டேப் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 1 நிகழ்ச்சி. அதில் தனது அபாரமான சமையல் திறமையை வெளிப்படுத்தி இரண்டாவது ரன்னர் அப் ஆனார் ரம்யா பாண்டியன். பின்னர் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்தார். 


 



பிக் பாஸ் வாய்ப்பு :


இப்படி படிப்படியாக முன்னேறிய ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் போல அமைந்தது பிக் பாஸ் சீசன் 4 வாய்ப்பு. பிக் பாஸ் வீட்டில் மிகவும் அருமையாக விளையாடி பைனல்ஸ் வரை தாக்குப்பிடித்து நான்காவது இடத்தை பிடித்தார். 


பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு ரம்யா பாண்டியன் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவான ஒரு பர்சனலிடியாக தொடர்ச்சியாக போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இது நம்ம ரம்யா பாண்டியனா என ஆச்சரியபடும் அளவுக்கு இருந்து அவர் போஸ்ட் செய்த புகைப்படங்கள். அந்த வகையில் அவரின் ஒவ்வொரும் போஸ்ட் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்து விடும். 


மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் வெயிட்டேஜ் அதிகமாக உள்ள முக்கியமான  ஒரு கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து இருந்தார். தற்போது 'இடும்பன்காரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் பிஸியாகவே இருக்கிறார். 


லவ் ஸ்டோரி :


சமீபத்தில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தனது காலேஜ் டேஸ் அனுபவம் குறித்த ஸ்வீட் மெமரிஸ் ஒன்றை பகிர்ந்து இருந்தார். தினமும் காலேஜ் செல்லும் போது ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்ததாகவும் காலேஜ் முடிந்து வீட்டுக்கு வரும்போது இவருக்காக காத்து இருந்து பின்தொடர்ந்து வந்துள்ளார். கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் பாலோ செய்த அந்த ஆசாமி ஒரு நாள் மனதில் தைரியத்தை வரவழைத்து ரம்யா பாண்டியனிடம் தனது காதலை சொல்லிவிட்டாராம். அதை எதிர்பார்க்காத ரம்யாவுக்கு உள்ளுக்குள் திக் திக் என இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 'நோ' சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டாராம்.