ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா பாடல் இணையத்தை கலக்கும் ரீல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. 


இணையத்தை கலக்கும் காவாலா:


இந்திய சினிமாவில் தற்போது பேன்  - இந்தியா திரைப்படமாக உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி மோகன் லால், ஜாக்கி ஷெரிஃப் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


இந்த படத்தின் போஸ்ட் பொரோடக்‌ஷன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அதாவது ஜூலை 28ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.


இந்நிகழ்வுக்கு முன்னர் நடிகை ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனம் ஆடிய நடனக் கலைஞர்களுடன் நடனம் ஆடியுள்ளார். இதனை வீடியோ  எடுத்துவைத்துள்ள நடனக் கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகின்றனர். 






ரம்யா கிருஷ்ணன் கலக்கல்:


ஏற்கனவே காவாலா பாடல் வைப் இன்னும் குறையாததற்கு முக்கிய காரணமே அப்பாடலுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட வரவேற்பு தான். இப்பாடல் இதுவரை இன்ஸ்டாகிராமில் இதுவரை 200 மில்லியனுக்கும் அதிகமான ரீல்ஸ்கள் பதியப்பட்டுள்ளது என சன்பிக்சர்ஸ் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளது அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை புகழ்ந்து தள்ளினார். தன்னுடைய சினிமா கேரியரை செதுக்கிய இயக்குநர்கள் வரிசையில் நெல்சனும் உள்ளார் என சொன்னபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும் ’சூப்பர் ஸ்டார்’ டைட்டில் என்றுமே தனக்கு தொல்லை தான் எனவும், ஹூக்கும் பாடலில் இடம்பெற்ற அந்த வார்த்தையையும் நீக்க சொன்னேன் எனவும் தெரிவித்தார். 


இப்படி ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் கீழே அமர்ந்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிச் சென்று, திடீரென  குறுக்கிட்டார். அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் இருவருக்குமிடையேயான காட்சியில் இடம் பெற்ற பிரபலமான, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும். கூடவே பொறந்தது. எங்கேயும் போகாது” என தெரிவிக்க ஒட்டுமொத்த நேரு ஸ்டேடியமும் ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது.