நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தில் முக்கிய பிரபலம் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது, இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த பீஸ்ட் படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது. 


அவரின் அடுத்தப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர்கள் பட்டியலில் ஏராளமான பெயர்கள் இடம் பெற்ற நிலையில் கடைசியில் ரஜினியின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் இயக்குநர் நெல்சனே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் படத்தின் பெயர் “ஜெயிலர்” என தேர்வு செய்யப்பட்டது. 






இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் இல்லை என்னும் அளவுக்கு ஜெயிலர் படத்துக்கான முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில நாட்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் 15 அல்லது 22 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட்டை தெரிவிக்க ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 


இதனிடையே இந்த படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக பெயர்கள் அடிபட்டது. ஆனால் படக்குழு சார்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில் தெலுங்கில் பூரி ஜெகநாத் எழுதி இயக்கியுள்ள ஜன கன மண படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


இதன் ஒரு பகுதியாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்குப் பின் தான் ரஜினியுடன் நடிக்கவுள்ளதால் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான படிக்காதவன், படையப்பா, பாபா (சிறப்பு தோற்றம்) ஆகிய படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண