தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ரஜிஷா விஜயன், தான் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாக கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ரஜிஷா விஜயன் சினிமா பயணம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டை பூர்வீகமாக கொண்டவர் ரஜிஷா விஜயன். இவர் கடந்த 2016ம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். அப்படத்திற்காக  சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். தொடர்ச்சியாக ஜார்ஜெட்டன்ஸ் பூரம், ஒரு சினிமாக்காரன், ஜூன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப், லவ், ஹோ ஹோ, எல்லாம் சரியாகும் என வரிசையாக படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தார்.  

தமிழில் எண்ட்ரீ

இப்படியான நிலையில் 2021ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் படத்தின் மூலம் ரஜிஷா விஜயன் தமிழில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பின்னர் ஜெய்பீம், சர்தார், பைசன் காளமாடன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

Continues below advertisement

சமூக வலைத்தளங்களுக்கு குட்பாய்

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரஜிஷா விஜயன், தான் கடந்த 8 ஆண்டுகளாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும், அப்படிப்பட்ட டிஜிட்டல் உலகை விட நேரடியான தொடர்புகளை தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது நான் இன்ஸ்டாகிராம் மட்டுமே மிக அரிதாக பயன்படுத்துகிறேன். ரீல்ஸின் வருகையால், மக்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறார்கள். புத்தகம் படிக்கவோ, படம் பார்க்கவோ, தங்கள் குடும்பத்தினருடன் பேசவோ யாருக்கும் நேரமில்லை. இது ஒரு பெரிய போதௌ எனவும் ரஜிஷா விஜயன் தெரிவித்துள்ளார். தொலைபேசி பயன்பாடு எனது எண்ணங்களைக் கட்டுப்படுத்தாமல் இருக்க, என்னுடைய மொபைல் போனில் உள்ள பல செயலிகளை நீக்கிவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், “ராணுவத்தில் மருத்துவராக வேண்டும் என்பது எனது பழைய கனவு. நான் ஒரு நடிகையாக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனினும் நான் விரும்பிய அனைத்து சிறிய விஷயங்களும் என் வாழ்க்கையில் நடந்து விட்டது” என ரஜிஷா பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.