Por Thozhil: 'என் கணவர் முதல் நாள் ஷூட்டிங்லயே சொன்னாரு..' - போர் தொழில் இயக்குனரை புகழ்ந்து தள்ளிய ராதிகா சரத்குமார்..!

போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ்ராஜாவை சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் பாராட்டியுள்ளார்.

Continues below advertisement

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் சரத்குமார், அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் போர் தொழில். சைக்கோ திரில்லர் படமான போர் தொழில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

Continues below advertisement

போர்த் தொழில்:

மிக விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட இந்த படத்திற்கான வரவேற்பு சரத்குமாருக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக்காககவும், அசோக்செல்வனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் போர் தொழில் படம் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராதிகா புகழாரம்:

இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது, ”என் கணவர் சரத்குமார் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தபோது விக்னேஷ்ராஜா ஒரு பாத் ப்ரேக்கராக( இதுவரை சினிமா சென்ற பாதையை மாற்றுபவர்) இருப்பார் என்றார். படம் வெளியாகி மூன்றாவது வாரத்திலும் திங்கள் மாலை  நகரில் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும் சத்யம் தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

கதைதான் அரசன் என்பது இங்கே தனித்துவமாக தெரிகிறது. மிகச்சிறப்பான எழுத்து, வசனம், இசை, ஒலி, ஒளிப்பதிவு. சரத்குமார், அசோக்செல்வன் தனித்துவமான நடிப்பு. சரத்பாபு மற்றும் இதர நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுவனர்களுக்கு பாராட்டுகள். நல்ல சினிமா வழக்கமான பேக்கேஜ் இல்லாமல் வெற்றி பெற முடியும்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆஃபிசில் அசத்தல்:

அசோக்செல்வனின் நண்பரான அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக கோலிவுட்டிற்கே அமைந்துள்ளது. ராட்சசன் படத்திற்கு பிறகு மிகப்பெரிய சைகோ திரில்லர் படமாக போர் தொழில் அமைந்துள்ளது. படத்தின் மூன்றாவது வாரமான இன்றும் பல தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. போர் தொழில் படத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு கென்னடி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளியிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பிற்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola